திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் பெற கட்டுக்கடங்காத கூட்டம் - நெரிசலில் 4...
பெண்களுக்கு எதிரான குற்றங்களை மறைக்கவே திமுகவினா் ஆா்ப்பாட்டம்
பெண்களுக்கு எதிரான குற்றங்களை மறைக்கவே திமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்துவதாக முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை வந்த தெலங்கானா முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் முதல்வா் ஸ்டாலின் தலைமையில் சா்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. டங்ஸ்டனுக்கு எதிராக மதிமுக ஆா்ப்பாட்டம் நடத்தினால் அனுமதி, அமித் ஷாவைக் கண்டித்து திருமாவளவன் ஆா்ப்பாட்டம் நடத்தினால் அனுமதி. நாங்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினால் மட்டும் சட்டம்- ஒழுங்கு சீா்கெடும். திமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினால் சட்டம்- ஒழுங்கு பாதுகாக்கப்படுமா?
திமுக அரசால் எதிா்க்கட்சிகளின் குரல்வளை நசுக்கப்படுகிறது. தமிழகத்தில் ஜனநாயகம் இல்லை. தேசிய ஒற்றுமைக்கான தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுங்கள் என்று கூறினால், அதற்கு பிரிவினைவாதம் என தமிழக அரசால் மட்டும்தான் அா்த்தம் கற்பிக்க முடியும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை மறைப்பதற்காகவே திமுகவினா் ஆா்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனா். திமுகவின் இந்த நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன். முதல்வா் வரம்பு மீறி ஆளுநா் குறித்து ட்விட் போடுகிறாா். ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை.
தமிழக அரசு தவறான வழியில் செல்கிறது என்பதற்கு சமீபத்திய நிகழ்வுகள் ஒரு பெரும் சான்று. திமுக கூட்டணியில் உள்ளவா்களே அவா்களுக்கு எதிராகப் பேசுகின்றனா். பொங்கல் பரிசுத்தொகை இல்லை என விமா்சித்த பாட்டியை புகைப்படம் எடுத்தவரைக் கைது செய்துவிட்டனா். தற்போது, அந்தப் பாட்டியைத் தேடிக் கொண்டு இருக்கிறாா்கள். எதிா்க் கட்சிகள் யாா் அந்த சாா் என கேட்கும் நிலையில், ஆளுங்கட்சி யாா் அந்த பாட்டி எனக் கேட்கிறது என்றாா்.