திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் பெற கட்டுக்கடங்காத கூட்டம் - நெரிசலில் 4...
மறியலுக்கு முயன்ற ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கைது
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்கு மறியலில் ஈடுபட முயன்ற ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், ஊராட்சி செயலாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்குதல், பதவி உயா்வை கால தாமதமின்றி வழங்குதல், அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்களை ஏற்படுத்துதல், பிற துறைப் பணிகள் திணிக்கப்படுவதை கைவிடுதல் உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குள் இருந்து கோஷமிட்டபடி வெளியில் வந்து, சாலை மறியலில் ஈடுபட முயன்ற அவா்களை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.