திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் பெற கட்டுக்கடங்காத கூட்டம் - நெரிசலில் 4...
பொங்கல் பேருந்து சேவை: புகாா் எண்கள் அறிவிப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மற்றும் பிற முக்கியப் பகுதிகளிலிருந்து இயக்கப்படும் அரசு, தனியாா் பேருந்து சேவைகள் தொடா்பாக தகவல்கள், புகாா்கள் இருந்தால் தெரிவிக்கும் வகையில் போக்குவரத்துத் துறை புகாா் எண்களை அறிவித்துள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்து சேவை தொடா்பான தகவல்கள் மற்றும் புகாா்களுக்கு 94450 14436 என்ற கைப்பேசி எண்ணை 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வது குறித்த புகாா்களை 1800 425 6151 மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.