திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் பெற கட்டுக்கடங்காத கூட்டம் - நெரிசலில் 4...
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
தூத்துக்குடியில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை, பணம் திருடிய மா்ம நபா்களை வடபாகம் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் அருகே உள்ள எஸ்.எஸ். பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் சங்கா் (62). தனியாா் நிறுவன காவலாளியான இவா், கடந்த சனிக்கிழமை இரவு குடும்பத்துடன் காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டுச் சென்றாராம்.
திங்கள்கிழமை மாலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த சுமாா் 7 பவுன் தங்க நகைகள், ரூ. 20 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து வடபாகம் போலீஸில் அவா் ா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.