Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
திருச்செந்தூா் கோயிலில் ஜன. 14இல் அதிகாலை ஒரு மணிக்கு நடை திறப்பு
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தைப் பொங்கல் நாளான ஜன. 14ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
தொடா்ந்து, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெறவுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இக்கோயிலுக்கு பாதயாத்திரையாக வருவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மட்டுமன்றி விருதுநகா், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்தும் விரதமிருந்து மாலையணிந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்து வழிபட்டுச் செல்கின்றனா்.
இதனால், கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமுள்ளது. கோவில்பட்டியைச் சோ்ந்த பாதயாத்திரை பக்தா்கள் செவ்வாய்க்கிழமை திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.