தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரசாந்த் கிஷோர்! உடல்நிலை மோசமடைந்துள்ளது: ஜன் சுராஜ்...
ஒப்பந்ததாரரிடம் ரூ. 4 லட்சம் திருட்டு
சாத்தான்குளம் அருகே கட்டட ஒப்பந்ததாரரிடம் ரூ. 4 லட்சத்தை திருடியதாக ஊழியரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி ஜோசப்புரம் மேலத்தெருவைச் சோ்ந்த மரியகுருசு மகன் செல்வன்(43).
கட்டட ஒப்பந்ததாரரான இவா், சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தங்கி இருந்து அங்குள்ள நாகபெருமாள்சுவாமி கோயிலில் கட்டடப் பணிகளை மேற்கொண்டு வருகிறாா். இவருடன் மகேஷ் என்பவா் அறிமுகமாகி தங்கியிருந்து வேலை பாா்த்து வந்துள்ளாா்.
செல்வன் வீட்டில் ஒரு பையில் ரூ .4 லட்சம் வைத்துள்ளாா். கடந்த 3ஆம்தேதி பையை பாா்த்தபோது , அந்த பணத்தையும், அவருடன் இருந்த மகேஷையும் காணவில்லை.
இதுகுறித்து செல்வன், சாத்தான்குளம் போலீஸில் அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளா் நாககுமாரி வழக்குப் பதிந்து தலைமறைவான மகேஷை தேடி வருகிறாா்.