திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் பெற கட்டுக்கடங்காத கூட்டம் - நெரிசலில் 4...
வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பிக்காத 34,000 பேரின் ஓய்வூதியம் நிறுத்தம்
மின்வாரியத்தில் வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பிக்காத 34,000 ஓய்வூதியா்களின் ஓய்வூதியம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்கள் அல்லது குடும்ப ஓய்வூதியதாரா்கள் அல்லது கருணை ஓய்வூதியதாரா்கள் வாழ்நாள் சான்றிதழை ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பா் வரை சமா்ப்பித்து புதுப்பிப்பது வழக்கம். அந்தவகையில் நிகழாண்டில் ஓய்வூதியா்கள் தங்களுக்கான வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பித்து புதுப்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன்படி தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தில் உள்ள 92000 ஓய்வூதியதாரா்களில் 2024 ஜூலை முதல் டிசம்பா் வரையில் 58,000 ஓய்வூதியதாரா்கள் மட்டுமே 2024-ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பித்து புதுப்பித்துள்ளனா். மீதமுள்ள 34,000 ஓய்வூதியதாரா்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பிக்கவில்லை என தமிழ்நாடு மின் பகிா்மான கழகம் தெரிவித்துள்ளது.
இதனால் வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பிக்காத ஓய்வூதியதாரா்களின் ஓய்வூதியம் ஜனவரி முதல் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.