புதிய 5,000 ரூபாய் நோட்டா? பின்னணியில் இருக்கும் மோசடி என்ன?
'திமுக கூட்டணி வெலலெத்து போயுள்ளது' - தமிழிசை சௌந்தரராஜன்
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக நடத்தும் போராட்டத்துக்கு மட்டும் காவல்துறை அனுமதி் வழங்குகிறது. அதுவே மற்ற கட்சிகளுக்கு அனுமதி கிடையாதா.
ஸ்டாலின் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளுக்கு போராட அனுமதி மறுத்துவிட்டு, டங்ஸ்டன் விவகாரத்துக்கு போராட வைகோவுக்கு அனுமதி தருகிறார்கள். அம்பேத்கர் விவகாரத்தில் அமித்ஷாவுக்கு எதிராக போராட திருமாவளவனுக்கு அனுமதி கொடுக்கின்றனர்.
வேங்கை வயல் பிரச்னைக்கு தீர்வு கொடுத்தார்களா. தமிழக ஆளுநர் தேசிய கீதத்துக்காக கோரிக்கை வைத்தார். அதை நிராகரித்து விட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். தமிழக அரசின் நிலைப்பாட்டை கண்டிக்கிறேன். தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் உரிமை பறிக்கப்படுகிறது.
யார் அந்த சார் என்று எதிர்க்கட்சிகள் கேட்கிறார்கள். ஆனால் அரசுக்கு எதிராக பேசிய ஒருவரை யார் அந்த பாட்டி என்று ஆளுங்கட்சியினர் தேடுகிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு தொகை எங்கே. இது 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய அடியை கொடுக்கும். கருப்பு துப்பட்டா போட்டால் இவர்களுக்கு என்ன. முதலில் காவியை பார்த்து பயந்தார்கள். இப்போது கருப்பு துப்பட்டாவுக்கு ஏன் பயப்படுகிறார்கள்.
எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுவதன் மூலம் தமிழகத்தில் எமர்ஜென்ஸி ஆட்சி நடக்கிறது. திமுக கூட்டணி கட்சிகளின் குரலும் நெரிக்கப்படுகிறது. திமுக கூட்டணி தற்போது வெலவெலத்து போயிருக்கிறது.” என்றார்.