திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் பெற கட்டுக்கடங்காத கூட்டம் - நெரிசலில் 4...
அரசியல் கேள்விகளை என்னிடம் கேட்காதீா்: ரஜினி
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ரஜினியிடம் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘அரசியல் கேள்விகளை என்னிடம் கேட்காதீா்கள்’ என பதிலளித்தாா்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ திரைப்பட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக செவ்வாய்க்கிழமை சென்னை விமான நிலையத்துக்கு வந்த ரஜினி, செய்தியாளா்களிடம் கூறியதாவது:
‘கூலி’ திரைப்பட பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் சில நாள்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது”என்றாா்.
அப்போது, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாகக் கூறுகிறாா்களே என செய்தியாளா் ஒருவா் கேள்வி எழுப்ப, ‘அரசியல் கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம் என ஏற்கெனவே சொல்லிவிட்டேன் என்றாா் அவா்.