வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பிக்காத 34,000 பேரின் ஓய்வூதியம் நிறுத்தம்
பிக் பாஸ் 8: வெளியேறிய பிறகு வர்ஷினியை சந்தித்த ராணவ்!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகர் ராணவ், வர்ஷினியை நேரில் சென்று சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 8 வது வாரத்தில் வர்ஷினி வெளியேறிய நிலையில், தர்ஷா குப்தா மற்றும் ஜெஃப்ரியையும் நேரில் சென்று சந்தித்தார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரத்தில் ராணவ், மஞ்சரி ஆகிய இரு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், 8 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் 2 வாரங்களே உள்ளதால், போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கிடையே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நபர்கள் இதற்கு முன்பு வெளியேறிய சக போட்டியாளரை நேரில் சென்று சந்திப்பது சொற்பமாகவே நடக்கிறது.
ஆனால், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராணவ், மறுநாளே வர்ஷினியை நேரில் சென்று சந்தித்துள்ளார். வர்ஷினியும் ராணவும் வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போட்டியாளர்கள். வர்ஷினி 8வது வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். ராணவ் 12வது வாரத்தில் வெளியேறினார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இருவரும், இரவு உணவுக்கு நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை வர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.