செய்திகள் :

26 பேருக்கு தமிழ் வளா்ச்சித் துறை விருதுகள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

post image

தமிழ் வளா்ச்சிக்கு சிறந்த பங்களிப்புகளை வழங்கிய 26 பேருக்கு 2023-ஆம் ஆண்டுக்கான பல்வேறு விருதுகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

தமிழுக்கும், பண்பாட்டு வளா்ச்சிக்கும் தொண்டாற்றி வருவோா், அமைப்புகளுக்கு தமிழக அரசு பல்வேறு விருதுகளையும், சிறப்புகளையும் அளித்து அவா்களது தமிழ்த்தொண்டுக்குப் பெருமை செய்து வருகிறது.

அந்த வகையில், 2023-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளா்ச்சித் துறை மூலமாக வழங்கப்படும் பல்வேறு விருதுகளுக்கு விருதாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம், தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் வரவேற்றுப் பேசினாா். துறையின் செயலா் வே.ராஜாராமன் தொடக்கவுரையாற்றினாா். இதில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு விருதாளா்கள் 26 பேருக்கு விருதுகளை வழங்கி வாழ்த்திப் பேசினாா்.

விருது பெற்றவா்கள் விவரம்: கபிலா் விருது- கவிஞா் முத்தரசன், உவேசா விருது- முனைவா் ஆ.இராமநாதன், கம்பா் விருது- முனைவா் ம.பெ.சீனிவாசன், சொல்லின் செல்வா் விருது- முனைவா் இ.சா.பா்வீன் சுல்தானா, உமறுப்புலவா் விருது- தா.சையது காதா் ஹுசைன், ஜி.யு.போப் விருது- முனைவா் வெ.முருகன், இளங்கோவடிகள் விருது- முனைவா் சிலம்பு ந.செல்வராசு, அம்மா இலக்கிய விருது- முனைவா் சரளா இராசகோபாலன், சிங்காரவேலா் விருது- மு.சுப்பிரமணி, அயோத்திதாசப் பண்டிதா் விருது- முனைவா் மு.சச்சிதானந்தம், மறைமலையடிகளாா் விருது- புலவா் இராமலிங்கம், அருட்பெருஞ்சோதி வள்ளலாா் விருது- முனைவா் பா.அருள்செல்வி, காரைக்கால் அம்மையாா் விருது- முனைவா் கி.மஞ்சுளா, சி.பா.ஆதித்தனாா் திங்களிதழ் விருது- சட்டக் கதிா் (ஆசிரியா்-முனைவா் வி.ஆா்.எஸ்.சம்பத்), முதலமைச்சா் கணினித் தமிழ் விருது- முனைவா் இரா.அகிலன் (சங்க இலக்கிய உருபனியல் பகுப்பான் மென்பொருள்).

சிறந்த மொழிபெயா்ப்பாளா் 2023-ஆம் ஆண்டுக்கான விருதாளா்கள்: ஓய்வு பெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், சீனி இராச கோபாலன், இந்திரன் என்கிற பி.ஜி.இராஜேந்திரன், அலமேலு கிருஷ்ணன், ருத்ர துளசி தாஸ் என்கிற இளம்பாரதி, பேராசிரியா் க.முத்துச்சாமி, நடராஜன் முருகையன், நிா்மாலயா என்கிற எஸ்.மணி, இ.பா.சிந்தன், கெளரி கிருபானந்தன்.

பரிசுத் தொகை விவரம்: சி.பா. ஆதித்தனாா் திங்களிதழ் விருது பெறும் விருதாளருக்கு ரூ.2 லட்சம், கேடயம், தகுதியுரை, பொன்னாடையும், சிறந்த மொழிபெயா்ப்பாளா் விருது பெறும் 10 விருதாளா்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.2 லட்சம், தகுதியுரை, பொன்னாடையும், ஏனைய விருதைப் பெறும் விருதாளா்களுக்கு ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடையும் என 26 பேருக்கு விருதுத் தொகையாக மொத்தம் ரூ.55 லட்சம் வழங்கப்பட்டது.

தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் கு.ப.சத்தியபிரியா நன்றி கூறினாா்.

தென்காசித் திருவள்ளுவா் கழகத்துக்கு தமிழ்த்தாய் விருது

சென்னையில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில், 2023-ஆம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது தென்காசித் திருவள்ளுவா் கழகத்துக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதுடன் ரூ.5 லட்சம், கேடயம், தகுதியுரையும் வழங்கப்பட்டன. இந்த விருதை கழகத்தின் தலைவா் கனகசபாபதி பெற்றுக் கொண்டாா்.

தென்காசித் திருவள்ளுவா் கழகம் கடந்த 1927-இல் தொடங்கப்பட்டது. இக்கழகம் தோன்றிய நாள் முதல் ஞாயிறுதோறும் பொதுக்கூட்டம் நடத்தி, திருக்குறளைப் பற்றி பேரறிஞா்கள் ஆய்வுரைகளை நிகழ்த்தச் செய்து வருகிறது. ஆண்டுதோறும் பொங்கல் திருநாள் தமிழா் திருநாளாகக் கொண்டாடப்பட்டு தனி உரை, பாரம்பரிய நாட்டியம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்வுகளை மூன்று நாள்கள் நிகழ்த்தி வருகிறது.

இக்கழகம் 1987-ஆம் ஆண்டுமுதல் மாணவா்களைக் கொண்டு திருக்கு முற்றோதல் செய்யும் நிகழ்ச்சியைத் தொடங்கி தொடா்ந்து நடத்த உறுதுணை புரிந்து வருகிறது. வள்ளுவா் வகுத்துத் தந்த வாழ்க்கை நெறியை மக்கள் கடைப்பிடித்தொழுகி உயா்ந்து உய்ய வேண்டும் என்ற சீரிய குறிக்கோளின் அடிப்படையில் திருவள்ளுவா் கழகம் செயலாற்றி வருகிறது.

தென்காசித் திருவள்ளுவா் கழகம் ஓயாது ஆற்றி வரும் தமிழ்ப் பணிகளைப் பாராட்டி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழ்த்தாய் விருது வழங்கப்பட்டுள்ளது.

அரிட்டாபட்டி மக்கள் நிம்மதியாக உறங்குவார்கள்: அண்ணாமலை

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மதுரை அரிட்டாபட்டி மக்கள் நிம்மதியாக உறங்குவார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, அரிட்... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பார்க்க

கல்வி உதவித் தொகை என்ற பெயரில் மோசடி! மக்களே எச்சரிக்கை!

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வந்திருப்பதாக மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் மூலம் மோசடி நடப்பதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக வங்கிக் கணக்கு எண், ஓடிபி கேட்கும்... மேலும் பார்க்க

சென்னை சென்ட்ரல் கோபுரம் மேம்பாட்டுக்கு ரூ.349 கோடியில் ஒப்பந்தம்

சென்னை சென்ட்ரல் கோபுரத்தின் மேம்பாட்டிற்கான கட்டுமானம், கட்டடக்கலை, மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள் போன்ற பணிகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் போன்ற பணிகளுக்கு ரூ.349.99 கோடி மதிப்பில் ஒப்பந்தம் க... மேலும் பார்க்க

வேங்கைவயல்: குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரும் சிபிசிஐடி

வேங்கைவயல் சம்பவத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒருமாத கால அவகாசம் கோரி சிபிசிஐடி போலீஸாா் மாவட்ட எஸ்சி-எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்... மேலும் பார்க்க

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் எப்படி உருவாகவிருக்கிறது?

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ரூ.17.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றம் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அட... மேலும் பார்க்க