செய்திகள் :

Couple: பொதுவெளியில் கெட்ட வார்த்தை பேசுகிற ஆணா நீங்கள்? - காமத்துக்கு மரியாதை 229

post image

சில ஆண்களுக்கு வாயை திறந்தாலே சர்வசாதாரணமாக கெட்ட வார்த்தைகள் வந்து விழும். அது தவறு என்கிற உறுத்தலே அவர்களிடம் இருக்காது. தவிர, அப்படி பேசுவதை ஏதோ கெத்து என்பது போல நடந்துகொள்வார்கள். இவர்களுக்கு கெட்ட வார்த்தை பேச பொதுவெளி, வீடு என்கிற வித்தியாசம் எல்லாம் இருக்காது. இவர்களுடைய இந்த இயல்பு இவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கையை எப்படி எல்லாம் பாதிக்கும் என்பது தெரியும்போது அதிர்ச்சிகரமாக இருக்கிறது. அதைப்பற்றி தான் டாக்டர் காமராஜ் இப்போது சொல்லவிருக்கிறார். 

’’அந்த ஆணுக்கு 30 வயதுக்குள்தான் இருக்கும். காதல் திருமணம் செய்தவர் அவர். திருமணமான ஒரே மாதத்தில் மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டாராம். இவர் அழைத்தாலும் வர மறுக்கிறாராம். அதனால், தன்னிடம்தான் ஏதோ பாலியல் தொடர்பான கோளாறு இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு என்னை பார்ப்பதற்கு வந்திருந்தார். அவரிடம் பேசிப் பார்த்த வகையிலும் பரிசோதித்து பார்த்த வகையிலும், அவருக்கு மனதளவிலும் சரி உடல் அளவிலும் சரி அவருக்கு எந்தவிதமான ஆண்மைக்குறைபாடும் இல்லை.

அவர் மிக மிக நார்மலாக இருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது. அதை அவரிடம் எடுத்துசொல்ல, ’இல்ல டாக்டர் என்கிட்ட ஏதோ பிரச்னை இருக்கு. அதனாலதான் என்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட என் வைஃப் என்கூட வாழ மறுக்கிறா’ என்று சொன்னதையே திருப்பித் திருப்பி சொன்னார். ’சரி உங்க மனைவியைக் கூட்டிட்டு வாங்க அல்லது என்கிட்ட போன்ல பேச சொல்லுங்க’ என்றேன். அவரோட மனைவியிடம் பேசியதற்கு பிறகுதான் பிரச்னை எங்கே இருக்கிறது என்பது புரிந்தது.

கணவன், மனைவி

‘என் கணவர் எதுக்கு எடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு கத்துகிற கேரக்டர். அது ரோடா இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி... நாங்க லவ் பண்ணும்போதுகூட இவர் இப்படித்தான் இருந்தார். சில நேரங்கள்ல பைக்ல ரெண்டு பேரும் போறப்போ ஏதாவது வாக்குவாதம் வந்தாகூட இப்படித்தான் கோபப்பட்டு கத்துவார். சரி அவருடைய இயல்பே முன்கோபபடுறதுதான். மத்தபடி நல்லவர்தான்னு அதை நான் பெருசா எடுத்துக்கல டாக்டர். தவிர, கல்யாணத்துக்கு அப்புறம் இதெல்லாம் சரியாகிடும்னு நம்பினேன். சரி செய்யவும் முயற்சி செஞ்சேன். ஆனா, இப்படி வீடு ரோடுன்னு பார்க்காம கத்துறதை இவர் ஏதோ பெரிய ஆம்பளத்தனம்னு நம்பிக்கிட்டு இருக்கார்.

என் பிறந்த வீட்டுக்கு நாங்க ஜோடியா போனப்பவும் இவரோட இயல்புபடியே தான் இருந்தார். சூழலுக்கு தகுந்த மாதிரியோ, சொந்தக்காரங்க நடுவுல எப்படி நடந்துக்கணும்னோ இவர் யோசிக்கவே இல்ல. வழக்கம் போலவேதான் இருந்தார். அதை நான் எடுத்து சொன்னதுக்கு வழக்கம்போலவே கோபமா ரியாக்ட் பண்ணினார். இது தப்பு, இது குடும்பத்துக்கு ஒத்துவராத குணம்னு என் அக்காவோட வீட்டுக்காரர் எடுத்துசொல்ல அவர்கிட்டயும் இவரோட வழக்கமான தொனியிலேயே பேசினார்.

எனக்கு ரொம்ப அவமானமா போயிடுச்சு. வீட்டுக்கு திரும்பி பைக்ல வர்றாப்போ, நீங்க இப்படி எதுக்கெடுத்தாலும் கோபப்பட்டு பேசறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. என் பிறந்த வீட்ல உங்க கோபத்தால எனக்கு அவமானமா போயிடுச்சுன்னு எடுத்துச்சொல்லியும் அவர் புரிஞ்சுக்கல. இதைவிட முக்கியமா பொதுவெளின்னு பார்க்காம ஒரு கெட்ட வார்த்தையை சொல்லி கோவமா கத்தினார். அவர் கத்தறதுக்கும் ஒரு சிக்னல்ல பைக் நிக்கிறதுக்கும் கரெக்டா இருந்துச்சு. அந்த சிக்னல்ல நின்னுட்டு இருந்த எல்லாரும் எங்களை திரும்பி பார்க்க ரொம்ப அவமானமா போயிடுச்சு. இதுக்கு மேல இவர்கிட்ட பேசி எந்த புண்ணியமும் இல்லை என்று புரிஞ்சிருச்சு. இவரோட இந்த இயல்பை பொறுத்துக்க முடியாமதான் நான் என் அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்.

Dr. Kamaraj

இவர் இந்த இயல்பை மாத்திகிற வரைக்கும் நான் இவர்கூட வாழ வரமாட்டேன் டாக்டர். இதுதான் என் தீர்மானம். இத நான் யாருக்காகவும் மாத்திக்கிறதா இல்ல. அவர் மாறினா மட்டும்தான் எங்க கல்யாண வாழ்க்கை கண்டினியூ ஆகும்’ என்று தீர்மானமாக சொல்லிவிட்டு அவங்க கிளம்பிட்டாங்க. அவங்க சொன்னதையும் இவர்கிட்ட இருக்கிற பிரச்னையும் எடுத்துச்சொன்னேன்.

’இதெல்லாம் ஒரு பிரச்னையா’ அப்படிங்கிற தொனியில் ‘இதுதான் என் இயல்பு’ என்றார். சக மனிதர்களை மரியாதைக் குறைவாக நடத்துவது நாகரீக மனிதனுக்கான அடையாளம் கிடையாது என எடுத்துச்சொன்னேன். பொதுவெளியில கெட்ட வார்த்தை பேசுவதோ, கோபமாக பேசுவதோ உங்களுக்கு இயல்பா இருக்கலாம். ஆனால், அதை தாங்கிக்க வேண்டிய அவசியம் மத்தவங்களுக்கு கிடையாது என்பதையும் எடுத்துச் சொன்னேன். நான் சொன்னதெல்லாம் காது கொடுத்து கேட்டுக்கொண்டார். ஆனால், அதையெல்லாம் அவர் ஃபாலோ செய்வாரா என்பது தெரியவில்லை. இந்த மாதிரியான ஆண்கள் நம்மிடையே நிறைய பேர் இருக்கிறார்கள். அந்தக் காலத்துப் பெண்கள் வேறு வழியில்லாமல் இந்த மாதிரியான ஆண்களை சகித்துக்கொண்டு உடன் வாழ்ந்தார்கள். படித்து தன்மானத்துடன் வாழ்ந்துக்கொண்டிருக்கிற இந்தக்காலப் பெண்கள் இதையெல்லாம் சகிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை புரிந்து நடந்துகொண்டால், உங்களுடைய தாம்பத்திய வாழ்க்கை நன்றாக இருக்கும்’’ என்கிறார் டாக்டர் காமராஜ்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Sexual Health: வளைந்த ஆணுறுப்பு வாழ்க்கையைக் கெடுக்குமா? | காமத்துக்கு மரியாதை -228

விந்து முந்துதல் அளவுக்குக்கூட வெளியில் சொல்ல முடியாத ஆண்களுடைய ஒரு பிரச்னை வளைந்த ஆணுறுப்பு.கிட்டத்தட்ட சம வயதுள்ள ஆண்கள் இருவர் என்னை சந்திக்க வந்திருந்தனர். அதில் ஒருவருக்கு கூடிய விரைவில் திருமணம்... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பேசணும்; ஆணுக்கோ தூங்கணும்... இது என்ன கலாட்டா..? - காமத்துக்கு மரியாதை 227

எல்லா கணவர்களும் செய்யுற ஒரு தப்பு. இந்த தப்பால மனசு வருத்தப்படாத மனைவி உலகத்திலேயே இல்லைன்னு தான் சொல்லணும். அப்படி என்ன தப்பை கணவர்கள் பண்றாங்கன்னு யோசிக்கிறவங்க டாக்டர் காமராஜ் சொல்றது சொல்றதை படிக... மேலும் பார்க்க

`உங்க மனைவிக்கு நீங்க கணவரா அல்லது மேனேஜரா..?' |காமத்துக்கு மரியாதை 226

’காதலிக்கிறப்போ இருந்த காதல் அல்லது நிச்சயதார்த்தம் முடிஞ்ச பிறகு இருந்த காதல் எங்க போச்சு’ அப்படிங்கிற கேள்வி எல்லா திருமணமான பெண்களோட மனசுலேயும் இருக்கும். ஆண்களோட மனசுல இருந்த அந்த காதல் உண்மையிலேய... மேலும் பார்க்க

முதலிரவில் ஆண்களுக்கு இப்படியும் சிக்கல் வரலாம்... பயம் வேண்டாம்.. | காமத்துக்கு மரியாதை - 225

எல்லோருக்குமே முதலிரவு என்பது வாழ்க்கையில் மறக்க முடியாத மகிழ்ச்சியான ஒருநாள் தான். ஆனால், எங்கோ ஒரு சிலருக்கு மட்டும் அது உயிர் போய்விடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவ... மேலும் பார்க்க