குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
இரும்புக் காலம்: இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து எழுதப்படுவதற்கான அச்சாணி!
5.300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்டதாக முதல்வர் அறிவித்த நிலையில், இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து எழுதப்படுவதற்கான அச்சாணி என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்
மேலும், கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொன்மையினங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள தனி இணையதளத்தையும் முதல்வர் தொடக்கிவைத்தார்.
5.300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்டது ஆய்வின் முடிவில் தெரியவந்ததாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
இதையும் படிக்க: கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் எப்படி உருவாகவிருக்கிறது?
இந்நிலையில், இது குறித்து நிதியமைச்சர் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:
”சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொல்லியல் துறை சார்பில் இன்று நடைபெற்ற விழாவில், முதல்வர் ஸ்டாலின் ‘இரும்பின் தொன்மை’ நூலை வெளியிட்டு, ரூ.17 கோடி மதிப்பீட்டில் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டி, கீழடி இணையதளத்தைத் தொடங்கி வைத்துக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த தொல்பொருள்களைப் பார்வையிட்ட நிகழ்வில், அமைச்சர்கள், தொல்லியல் அறிஞர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்டோரோடு பங்கேற்றேன்.
உலகிற்கு வழிகாட்டியாகத் திகழும் தலைநிமிர்ந்த தமிழினத்திற்கு மேலும் ஒரு மணிமகுடமாக, தொல்லியல் ஆய்வு முடிவுகளைச் சுட்டிக்காட்டி, முதல்வர் ஸ்டாலின் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தொல் தமிழ்ச் சமூகம் இரும்பின் பயன்பாட்டைக் கண்டறிந்து, இரும்பு உருக்கு தொழில்நுட்பத்தைக் கையாண்டதாக அறிவித்தது, இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து எழுதப்படுவதற்கான அச்சாணி!” என்று குறிப்பிட்டுள்ளார்.