செய்திகள் :

கோமியம் ஒவ்வாமையை ஏற்படுத்தும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

post image

கோமியத்தில் உள்ள சேர்மங்கள் மற்றும் புரதம் பலருக்கு ஒவ்வாமையை உருவாக்கும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.

பொங்கல் விழாவையொட்டி சென்னையில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி, "கோமியம் மருத்துவக் குணங்கள் கொண்டது. அதனைக் குடித்தால் நோய்கள் குணமடையும். உடலுக்கு நன்மை ஏற்படும்" என்று பேசினார்.

இது பற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது:

ஐஐடி இயக்குநர் காமகோடியின் கருத்துகள் ஆதாரப்பூர்வமற்றது. மூடநம்பிக்கை சார்ந்தது. சாதாரண ஏழை எளிய மக்களிடையே பரப்பும் ஆபத்தான பரிந்துரையும்கூட.

கோமியம் ஆயுர்வேத மருத்துவத்தில் பரிந்துரை செய்யப்பட்டாலும் பயன்படுத்தப்பட்டாலும் அது நோய்களை குணமாக்கும் என்பதற்கு அறிவியல் பூர்வமான எந்தவிதமான நிரூபணமும் இல்லை.

உலக சுகாதார நிறுவனம் அல்லது எந்தவொரு உலகளாவிய சுகாதார அமைப்பும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, கோமியம் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும். கோமியத்தில் உள்ள ஈ. கோலை, சால்மோனெல்லா மற்றும் கேம்பிலோபாக்டர் ஆகிய தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புகள் உண்டு.

இவை சிறுநீர்பாதைத் தொற்றுக்கள், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம். கோமியத்தில் உள்ள சேர்மங்கள் மற்றும் புரதம் பலருக்கு ஒவ்வாமையை உருவாக்கும். அதுவும் நோய்வாய்ப்பட்ட பசுக்களின் கோமியம் அதிகம் பாதிப்புகளை உருவாக்கும்.

இதையும் படிக்க: கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் எப்படி உருவாகவிருக்கிறது?

தற்போதைய இந்திய அரசு உருவாக்கியிருக்கும் ஆயுஷ் என்ற அமைச்சகம் இதுபோன்ற குழப்பங்களுக்கு வித்திடுகிறதேதவிர, இந்த அரசின் கால்நடை மருத்துவத்துறை இதனை மருந்து என்றோ மருத்துவக் குணங்கள் உள்ளதென்றோ இதுவரை பரிந்துரை செய்யவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அறிவியலை ஆதாரமாகக் கொண்டு துல்லியமான விளைவுகளை மையமாகக்கொண்டு தொழில்நுட்பங்கள் உருவாகிறது.

அத்தகைய உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் அவரது தனிப்பட்ட நம்பிக்கைச்சார்ந்த அல்லது தற்போதைய அரசியல் சூழலில் அவருக்கு சுயநலன் சார்ந்த காரணங்களுக்காகவும் மற்றும் அடிப்படைவாதக் கருத்துகளை முன்னெடுக்கும் நோக்கத்தில் அறிவியல் அடிப்படையில்லாத ஆபத்து நிறைந்த கருத்துகளைப் பரப்புவதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

கவனமாக இருங்கள்: ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு!

என் பெயரைச் சொன்னால் கவனமாக இருங்கள் என்று நடிகர் ராஜ்கிரண் பதிவிட்டுள்ளார்.தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முகம் கொண்டவர் நடிகர் ராஜ்கிரண். இவர் இட்லிக் கடை, மாமன், வா வாத்தியாரே உள்ளிட்ட படங்க... மேலும் பார்க்க

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்கள் முடக்கம்!

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ரூ. 1.26 கோடி மதிப்பிலான சொத்துகளை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.சென்னை மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த ந... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம்.வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விடுதலை -2 திரைப்படம் அமேசான்... மேலும் பார்க்க

1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல தைவான் அரசு திட்டம்!

தைவான் நாட்டில் சுமார் 1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளை பூர்வீகமாக கொண்ட பச்சை இகுவானா என்றழைக்கப்படும் பச்சைப் பேரேந... மேலும் பார்க்க

இரும்புக் காலம்: இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து எழுதப்படுவதற்கான அச்சாணி!

5.300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்டதாக முதல்வர் அறிவித்த நிலையில், இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து எழுதப்படுவதற்கான அச்சாணி என்று நிதியமைச்சர் தங்கம்... மேலும் பார்க்க

தில்லியில் 19 வயது இளைஞர் குத்திக்கொலை! 2 பேர் கைது!

புது தில்லியில் 19 வயது இளைஞரை கத்தியால் குத்திக்கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மங்கோல்புரி பகுதியைச் சேர்ந்த லக்கி (வயது 19), நேற்று (ஜன.22) மாலை உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட ... மேலும் பார்க்க