தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு: ராகுல் பெருமிதம்
தில்லியில் 19 வயது இளைஞர் குத்திக்கொலை! 2 பேர் கைது!
புது தில்லியில் 19 வயது இளைஞரை கத்தியால் குத்திக்கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மங்கோல்புரி பகுதியைச் சேர்ந்த லக்கி (வயது 19), நேற்று (ஜன.22) மாலை உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் வீடு திரும்பியுள்ளார். பின்னர், உயிருக்கு போராடிய லக்கியை அவரது சகோதரர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
அவர் பலியாவதற்கு முன்னர் தன்னை கத்தியால் குத்தியவர்களின் பெயர்களை லக்கி தனது சகோதரரிடம் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: ரூ.3.38 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்! ஒருவர் கைது!
இதனைத் தொடர்ந்து, அவரது சகோதரர் அளித்த புகார் மற்றும் மருத்துவமனை அளித்த சான்றிதழின் அடிப்படையிலும் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர். பலியான லக்கி அடையாளம் காட்டிய சுமார் 18 வயது மதிக்கத்தக்க இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலையின்றி இருந்த லக்கி கடந்த சில நாள்களுக்கு முன்னர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதனால் அவர்கள் இருவரும் லக்கியை கத்தியால் குத்தியதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.