குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
கல்வி உதவித் தொகை என்ற பெயரில் மோசடி! மக்களே எச்சரிக்கை!
மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வந்திருப்பதாக மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் மூலம் மோசடி நடப்பதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக வங்கிக் கணக்கு எண், ஓடிபி கேட்கும் போன் அழைப்புகளை நம்ப வேண்டாம் என பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்வி உதவித்தொகையானது எஸ்.சி.,/எஸ்.டி., பிசி, எம்பிசி ஆகிய நலத்துறைகள் மற்றும் சமூக நலத்துறை மூலம் நேரடியாகவே வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது.
பள்ளியிலிருந்து மாணவர்களின் தகவல்களைப் பெற்றுத்தான் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். எனவே, போன் பே அல்லது ஜி பேயில் உதவித்தொகை அனுப்புவோம் என வரும் அழைப்புகள் மோசடி அழைப்புகளாக இருக்கலாம் என பெற்றோருக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கில் உதவித் தொகை செலுத்தப் போகிறோம், ஓடிபி எண்ணை சொல்லுங்கள் என்றும் சில மோசடியாளர்கள் செல்ஃபோனில் அழைக்கலாம். எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.