செய்திகள் :

கட்டுப்பாட்டை இழந்த அஜித்: நொறுங்கிய கார் - விடியோ!

post image

நடிகர் அஜித் குமார் கார் ரேஸ் பயிற்சியின்போது விபத்தில் சிக்கினார்.

நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு வந்தார்.

இதற்காக, கடந்த ஆண்டே ’அஜித் குமார் ரேஸிங்’ என்கிற நிறுவனத்தை தொடங்கினார்.

இதையும் படிக்க: கார் ரேஸ் பயிற்சி: விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!

இந்த நிலையில், துபையில் கார் ரேஸுக்கான பயிற்சியில் ஈடுபட்டபோது கட்டுப்பாட்டை இழந்த அஜித்தின் கார் தடுப்பின் மீது மோதியது. இதனால், வேகமாக சில வினாடிகள் சுழன்ற காரின் முன்பக்கம் கடுமையாக சேதமானது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக நடிகர் அஜித் காயமின்றி தப்பியுள்ளார். கார் விபத்திற்குள்ளாகும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபெரரி வகைக் காரான இதன் விலை ரூ. 9 கோடியாம்.

விபத்தையொட்டி பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா - ஆர். ஜே. பாலாஜி படத்தின் பெயர் இதுவா?

சூர்யா - 45 படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில், த்ரிஷ... மேலும் பார்க்க

ஹிந்தி பிக் பாஸ்: ஸ்ருதிகா வெற்றிக்காக களமிறங்கிய நண்பர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை ஸ்ருதிகாவுக்கு ஆதரவாக நடிகர் புகழ் விடியோ வெளியிட்டுள்ளார். அதில் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதிகா வெற்றி பெற தமிழக ரசிகர்கள் அனைவரும் வாக்களிக்... மேலும் பார்க்க

ரெட்ரோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்ரோ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்த கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.சூர்யா - 44 என நீண்ட நாள்களாக அழைக்கப்... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: விதிகளை மீறியதால் 2வது நாளே வெளியேறிய ரவீந்தர்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியேற்றப்பட்டுள்ளார். நிகழ்ச்சியை சுராவசியமாக்க முன்னாள் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நேற்று நுழைந்த நிலையில், விதிகளை மீறியதால... மேலும் பார்க்க

லிவர்பூல் கால்பந்து அணியை வாங்க விரும்பும் எலான் மஸ்க்!

பிரபல கால்பந்து கிளப் அணியான லிவர்பூல் அணியை எலான் மஸ்க் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரும், டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், ப்ளூம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் வெளியீடாகக் கூலி?

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகர... மேலும் பார்க்க