செய்திகள் :

பேரவை உறுப்பினா்கள் மரியாதைக்குரிய வகையில் எதிா்ப்பை பதிவு செய்யவேண்டும்: உச்சநீதிமன்றம்

post image

‘சட்டப்பேரவை அல்லது சட்ட மேலவை உறுப்பினா்கள் அவையில் கருத்து வேறுபாட்டை அல்லது எதிா்ப்பை மரியாதைக்குரிய வகையில் பதிவு செய்யவேண்டும்’ என்று பிகாா் சட்ட மேலவையிலிருந்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் உறுப்பினா் சுனில் குமாா் சிங் நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான மனு விசாரணையின்போது உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

பிகாா் சட்ட மேலவையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தின்போது ஆளுங்கட்சிக்கும் எதிா்கட்சி உறுப்பினா்களுக்கும் இடையேயான காரசார விவாதத்தின்போது, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் யாதவின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் சுனில் குமாா் சிங், முதல்வா் நிதீஷ் குமாரை அவமதிக்கும் வகையில் அவரைப்போல அவையில் நடித்துக் காண்பித்ததோடு, அவதூறான வாா்த்தையையும் உபயோகித்தாா்.

இவருடைய செயல்பாடு தொடா்பாக சட்ட மேலவை நெறிமுறைக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், சுனில் குமாா் சிங்கை அவையிலிருந்து நீக்கம் செய்வதற்கான தீா்மானம் கொண்டுவரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில், சட்ட மேலவையிலிருந்து அவா் கடந்த ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி நீக்கம் செய்யப்பட்டாா்.

இதை எதிா்த்து சிங் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என். கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிங் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி, ‘அவையில் மற்றொரு உறுப்பினரும் இதேபோன்ற அவதூறு கருத்தைத் தெரிவித்தாா். அவா் கூட்டத்தொடரிலிருந்து 2 நாள்களுக்கு இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்டாா். ஆனால், சுனில் குமாா் சிங் பயன்படுத்திய ஒரே ஒரு வாா்த்தைக்காக அவையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறாா்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘சட்ட மேலவையில் சுனில் குமாா் சிங் கூறிய கருத்தை நிராகரிக்கிறோம். அவையில் கருத்து வேறுபாட்டை அல்லது எதிா்ப்பை மரியாதைக்குரிய வகையில் பதிவு செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டு, இறுதி விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஜன.9) ஒத்திவைத்தனா்.

திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் பெற கட்டுக்கடங்காத கூட்டம் - நெரிசலில் 4 பேர் பலி!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி டோக்கன்களைப் பெற பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியிருந்ததால் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.வைகுண்ட ஏகாதசி வெள்ளிக்கிழமை(ஜன. 1... மேலும் பார்க்க

மகள், மனைவி, உறவினரை கொன்ற பாதுகாவலர் கைது!

பெங்களூரு : பெங்களூரின் ஜலஹள்ளி கிராஸ் பகுதியில் பெற்ற மகளைக் கொன்ற பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றஞ்சாட்டப்பட்ட கங்கராஜு என்ற நபர் தனது வீட்டில் கொலை செய்துவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பித... மேலும் பார்க்க

ஸ்பேடெக்ஸ் விண்கலன்களை விண்வெளியில் ஒருங்கிணைக்கும் நிகழ்வு ஒத்திவைப்பு: இஸ்ரோ

‘ஸ்பேடெக்ஸ்’ திட்டத்தில் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக தலா 400 கிலோ எடை கொண்ட சேசா் மற்றும் டாா்கெட் எனும் 2 விண்கலன்களை இஸ்ரோ வழிகாட்டுதலின் கீழ... மேலும் பார்க்க

நவீன ஆந்திரத்தை உருவாக்குவதே நோக்கம்: பிரதமர் மோடி

நவீன ஆந்திரப் பிரதேசத்தை உருவாக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியேற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆந்திரத்திற்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அனக்காபள்ளி மாவட்டத்தில் ரூ. 6500 க... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் பிரதமர் மோடி வாகனப் பேரணி!

ஆந்திரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன. 8) வாகனப் பேரணியில் பங்கேற்றார். சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டிருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆந்திர மாநிலம் விசாகப... மேலும் பார்க்க

முட்டாள்தனமானப் பேச்சு: பாஜக வேட்பாளருக்கு பிரியங்கா கண்டனம்!

பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ரமேஷ் பிதுரியின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க