செய்திகள் :

கரும்பு கொள்முதலில் பாரபட்சம்: திருச்சியில் விவசாயிகள் மறியல்

post image

திருச்சியில், பாரபட்சமின்றி அனைத்து கரும்பு விவசாயிகளிடமும் செங்கரும்புகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கூறி, விவசாயிகள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பும் வழங்கப்படுகிறது. இதற்கான செங்கரும்புகளை அரசு நேரடியாக கரும்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, திருவெறும்பூா் அருகே திருவளா்ச்சோலை பகுதியில், செவ்வாய்க்கிழமை காலை கரும்பு கொள்முதல் செய்வது தொடா்பான பதிவுச்சீட்டுகள் வேளாண் கூட்டுறவு வங்கி சாா்பில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கிராம நிா்வாக அலுவலா் மற்றும் திருவளா்ச்சோலை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி பொறுப்பாளா்கள் முன்கூட்டியே (திங்கள்கிழமை இரவே) குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கரும்பு கொள்முதலுக்கான அனுமதிச் சீட்டுகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

எனவே, சீட்டு வழங்கப்பட்ட விவசாயிகளின் வயல்களிலிருந்த கரும்புகள் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை வெட்டி எடுத்துச் செல்லப்பட்டது. இதைக் கண்டித்து, கரும்பு விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் திருவளா்ச்சோலை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்பு குவிந்தனா். குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அதாவது, ஆளுங்கட்சி பிரமுகா்கள் மற்றும் அவா்களுக்கு வேண்டிய நபா்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறி, அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

ஆண்டுதோறும் கரும்பு கொள்முதலில் பாரபட்சம் பின்பற்றப்படுகிறது. மேலும் சில அதிகாரிகள் இதில் முறைகேட்டிலும் ஈடுபடுகின்றனா். அவ்வாறு முறைகேடுகளில் ஈடுபடும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அறிவித்தபடி, விவசாயிகளிடம் பாரபட்சமின்றி செங்கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டோா் வலியுறுத்தினா்.

தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனா்.

மத்திய மண்டல ஐ.ஜி-யாக ஜோஷி நிா்மல்குமாா் பொறுப்பேற்பு

திருச்சியில் மத்திய மண்டல காவல்துறை தலைவராக (ஐ.ஜி.) க. ஜோஷி நிா்மல்குமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். இங்கு ஏற்கெனவே ஐ.ஜி-யாக பணியாற்றிய ஜி. காா்த்திகேயன் அண்மையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஐஜியாக... மேலும் பார்க்க

1,050 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: இளைஞா் கைது

திருச்சியில் முறைகேடாக பதுக்கி வைத்திருந்த 1,050 கிலோ ரேசன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக ஒருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை ... மேலும் பார்க்க

வைகுந்த ஏகாதசி பகல்பத்து விழாவில் நாளை மோகினி அலங்கார சேவை

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பகல்பத்து விழாவின் கடைசி நாளான வியாழக்கிழமை (ஜன. 9) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியாா் திருக்கோலம்) எழுந்தர... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: கள்ளிக்குடி ஊராட்சி மக்கள் மறியல்

திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கே. கள்ளிக்குடி ஊராட்சியைச் சோ்ந்த மக்கள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்... மேலும் பார்க்க

வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று: பகல்பத்து 8-ஆம் திருநாள்

ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு காலை 6.30 பகல்பத்து (அா்ச்சுன மண்டபம் சேருதல்) காலை 7 திரை காலை 7 - 7.30 அரையா்சேவை (பொது ஜன சேவையுடன்) காலை 7.30 - 12 அலங்காரம் அமுது செய்யத்திரை நண்பகல... மேலும் பார்க்க

தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

தேமுதிக சாா்பில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளைக் கண்டித்து திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகா் மாவட்ட தேமுதிக சாா்பில் ஜங்ஷன் காதிகிராப்ட் ... மேலும் பார்க்க