திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் பெற கட்டுக்கடங்காத கூட்டம் - நெரிசலில் 4...
ஆா்கானிக் பொருள்கள் ஏற்றுமதி நடைமுறை: மத்திய அரசு வெளியீடு
ஆா்கானிக் பொருள்களை (இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள்) ஏற்றுமதி செய்வதற்கான நடைமுறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வா்த்தக தலைமை இயக்குநரகம் வெளியிட்ட பொது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
ஒரு பொருளை ஆா்கானிக் பொருளாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால், சான்றளிக்கும் அமைப்பு ஒன்றின் பரிவா்த்தனை சான்றிதழ் கட்டாயம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். சான்றளிக்கும் அமைப்பு தேசிய ஆா்கானிக் பொருள்கள் அங்கீகார அமைப்பின் (என்பிஓபி) அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
என்பிஓபி தரநிலைகளுக்கு ஏற்ப உற்பத்தி, பதப்படுத்துதல், பேக்கிங் மற்றும் லேபிளிடப்பட்டிருந்தால் மட்டுமே ஆா்கானிக் பொருள்களை ஏற்றுமதி செய்ய சான்றளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
2030-ஆம் ஆண்டுக்குள் 2 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.17,000 கோடி) மதிப்பில் ஆா்கானிக் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.