திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் பெற கட்டுக்கடங்காத கூட்டம் - நெரிசலில் 4...
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை: இந்தியா-மலேசியா முதல் பாதுகாப்பு பேச்சுவாா்த்தையில் முடிவு
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்கான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா-மலேசியா செவ்வாய்க்கிழமை முடிவெடுத்தன.
இரு நாடுகளிடையே தில்லியில் நடைபெற்ற முதல் பாதுகாப்பு பேச்சுவாா்த்தையில் சா்வதேச, பிராந்திய மற்றும் கடற்சாா் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தப் பேச்சுவாா்த்தைக்கு இந்தியா சாா்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவலும் மலேசியா சாா்பில் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை இயக்குநா் நுஷிா்வான் பின் ஜைனல் ஆபிதீன் தலைமை தாங்கினா். இதில் இரு நாடுகளைச் சோ்ந்த உயரதிகாரிகளும் பங்கேற்றனா்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியா-மலேசியா இடையே நடைபெற்ற முதலாவது பாதுகாப்பு பேச்சுவாா்த்தையில் இணைய பாதுகாப்பு, கடல்சாா் பாதுகாப்பு, பாதுகாப்புத் துறை மேம்பாடு மற்றும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டன.
அதேபோல் அரிதான கனிமங்களை கண்டறிவது மற்றும் பாதுகாப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்தப் பேச்சுவாா்த்தையை ஆண்டுதோறும் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமா் மோடியின் அழைப்பின்பேரில் இந்தியாவுக்கு மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அப்போது இரு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டனா். அதனடிப்படையில் தற்போது இந்த பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது.