டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய முகமது சிராஜ்!
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதையும் படிக்க:காரணம் கூறாமல் மூத்த வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாடுங்கள்: முன்னாள் இந்திய கேப்டன்
100 விக்கெட்டுகள்
சிட்னியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜாவை அவர் ஆட்டமிழக்கச் செய்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றியதன் மூலம், முகமது சிராஜ் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் தனது 100-வது விக்கெட்டினைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இதுவரை இந்திய அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது சிராஜ், 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் 3 ஐந்து விக்கெட்டுகள் அடங்கும்.