செய்திகள் :

Madraskaaran: "என்ன எப்போதும் செகண்ட் ஹீரோவாகவே தேர்ந்தெடுக்குறாங்க..." - கலையரசன் ஆதங்கம்

post image
எஸ் ஆர் புரொடக்ஷன் சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், 'ரங்கோலி' பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் 'மெட்ராஸ்காரன்'.

பொங்கலை முன்னிட்டு இப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் தனது ஆதங்கத்தைக் கொட்டி இருக்கிறார் நடிகர் கலையரசன். மேடையில் பேசிய அவர், "இனிமேல் துணை கதாபாத்திர வேடங்களை அதிகமாகப் பண்ணப்போவதில்லை. அதற்குக் காரணம் என்னவென்றால் இந்த துறையில் நான் ஆரோக்கியமாக இல்லை என்று நினைக்கிறேன்.

மெட்ராஸ்காரன்
மெட்ராஸ்காரன்

எனக்குச் சோறு போட்டதே இந்தத் துணை கதாபாத்திரங்கள்தான். அதை நான் மறக்கவே மாட்டேன். மலையாள சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் பெரிய படத்தில் சிறிய கதாபாத்திரங்கள் நடித்திருப்பார்கள். ஆனால் அவர்களை ஹீரோவாக வைத்து இரண்டு மூன்று படங்கள் வெளியாகும். இங்கேயும் அந்த சூழல் இருக்கிறது.

இல்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் கம்மியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இங்கு ஒரு நடிகர் வில்லனாக நடித்தால் வில்லனாகவேதான் நடிக்க அழைப்பார்கள். அதேபோல சாவு என்றால் வந்தாலே என் பெயரை எழுதிருவார்கள் போல.

கலையரசன்
கலையரசன்

இதுவும் ஒரு பஞ்சாயத்தாவே இருக்கிறது. என்னை எப்போதும் செகண்ட் ஹீரோவாகவே தேர்ந்தெடுக்கிறார்கள். இனிமேல் முடிந்த அளவுக்கு லீட் ரோலில் நடிப்பேன்" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Hansika Motwani: `குடும்ப வன்முறை' -ஹன்ஸிகா மோத்வானி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த காவல்துறை!

மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலக்கு அறிமுகமான நடிகை ஹன்ஸிகா மோத்வானி. அதைத் தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடித்து தனக்கான ரசிகர் வட்டத்தை அமைத்துக் கொண்டவர். இவருடைய சகோதரர் பிரசாந்... மேலும் பார்க்க

`மதகஜராஜா வந்தாச்சு; இதெல்லாம் எப்போ?' துருவ நட்சத்திரம் டு பார்ட்டி வரை காத்திருக்கும் படங்கள்

கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர்.சி.யின் இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, நிதின் சத்யா, சோனுசூட் மற்றும் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் எடுக்கப்பட... மேலும் பார்க்க

Ajith Kumar: "That’s racing..." - கார் ரேஸ் பயிற்சியின்போது அஜித் குமாருக்கு விபத்து

அஜித் குமார் ரேஸிங் டீம் துபாய்க்குச் சென்றிருக்கிறது.நடிப்பைத் தாண்டி ரேஸிங் களத்திலும் தற்போது அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறார் அஜித் குமார். புதியதாக `அஜித்குமார் ரேஸிங்' என்ற குழுவையும் கடந்தாண்ட... மேலும் பார்க்க

Sivakarthikeyan:``என்னுடைய தயாரிப்பில் உங்களின் முதல் இந்திப் படம் என அமீர் கான் சொன்னார்" - எஸ்.கே

சிவகார்த்திகேயன் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படம், சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் படம் என வலுவான லைன் அப்களை தனது கையில் வைத்திருக்கிறார்.இதுமட்டுமல்ல `டான்' சிபி சக்ரவர்த்தி இயக்கத்தி... மேலும் பார்க்க

KH 237: அமெரிக்காவில் AI படிப்புடன் ஸ்கிரிப்ட் வொர்க்; ஆரம்பமாகும் அடுத்த அதிரடி

மணிரத்னத்தின் இயக்கத்தில் 'தக் லைஃப்' படத்தில் நடித்து வந்த கமல்ஹாசன், அந்த படத்தை முடித்து கொடுத்து விட்டு, ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு பறந்தார். கடந்த நவம்பர் மாதத்தோடு 'தக் லைஃப்' படப்பிட... மேலும் பார்க்க