செய்திகள் :

Hansika Motwani: `குடும்ப வன்முறை' -ஹன்ஸிகா மோத்வானி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த காவல்துறை!

post image

மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலக்கு அறிமுகமான நடிகை ஹன்ஸிகா மோத்வானி. அதைத் தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடித்து தனக்கான ரசிகர் வட்டத்தை அமைத்துக் கொண்டவர். இவருடைய சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கும், தொலைக்காட்சி நடிகையான முஸ்கன் நான்சி ஜேம்ஸ் என்பவருக்கும் 2020-ல் திருமணம் நடந்தது. ஆனால் 2022-ல் இருவரும் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தனித் தனியே வாழ்கின்றனர்.

இந்த நிலையில், மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் டிசம்பர் 18, 2024 அன்று பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவுகள் 498-A, 323, 504, 506, 34 ஆகியவற்றின் கீழ் நடிகை ஹன்ஸிகா மோத்வானி குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பிரசாந்த் மோத்வானி - முஸ்கன் நான்சி ஜேம்ஸ்

அந்தப் புகாரில்,``என் கணவரும், அவருடைய அம்மா மோனா மோத்வானி, அவரது சகோதரி ஹன்சிகா மோத்வானி ஆகியோர் என்னிடம் குடும்ப வன்முறையில் ஈடுபட்டார்கள். என் தனிப்பட்ட திருமண வாழ்க்கையில் இருவரும் தலையிட்டு என் கணவருடனான உறவில் சிக்கலை ஏற்படுத்தினார்கள். அதனால் தாக்குதலுக்குள்ளான நான், பெல்ஸ் பால்சி (முகத்தின் ஒரு பக்கத்திலுள்ள தசைகள் தற்காலிக பலவீனம் அல்லது செயலிழப்பது) நோயால் பாதிக்கப்பட்டிருக்கறேன். மூவரும் விலையுயர்ந்த பொருள்களை கேட்கிறார்கள். சொத்து விவகாரத்தில் மோசடி நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் மோத்வானி, ``நான் இப்போது சட்ட உதவியை நாடியுள்ளேன். இந்த கட்டத்தில், மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என்றார்.

`மதகஜராஜா வந்தாச்சு; இதெல்லாம் எப்போ?' துருவ நட்சத்திரம் டு பார்ட்டி வரை காத்திருக்கும் படங்கள்

கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர்.சி.யின் இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, நிதின் சத்யா, சோனுசூட் மற்றும் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் எடுக்கப்பட... மேலும் பார்க்க

Ajith Kumar: "That’s racing..." - கார் ரேஸ் பயிற்சியின்போது அஜித் குமாருக்கு விபத்து

அஜித் குமார் ரேஸிங் டீம் துபாய்க்குச் சென்றிருக்கிறது.நடிப்பைத் தாண்டி ரேஸிங் களத்திலும் தற்போது அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறார் அஜித் குமார். புதியதாக `அஜித்குமார் ரேஸிங்' என்ற குழுவையும் கடந்தாண்ட... மேலும் பார்க்க

Sivakarthikeyan:``என்னுடைய தயாரிப்பில் உங்களின் முதல் இந்திப் படம் என அமீர் கான் சொன்னார்" - எஸ்.கே

சிவகார்த்திகேயன் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படம், சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் படம் என வலுவான லைன் அப்களை தனது கையில் வைத்திருக்கிறார்.இதுமட்டுமல்ல `டான்' சிபி சக்ரவர்த்தி இயக்கத்தி... மேலும் பார்க்க

KH 237: அமெரிக்காவில் AI படிப்புடன் ஸ்கிரிப்ட் வொர்க்; ஆரம்பமாகும் அடுத்த அதிரடி

மணிரத்னத்தின் இயக்கத்தில் 'தக் லைஃப்' படத்தில் நடித்து வந்த கமல்ஹாசன், அந்த படத்தை முடித்து கொடுத்து விட்டு, ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு பறந்தார். கடந்த நவம்பர் மாதத்தோடு 'தக் லைஃப்' படப்பிட... மேலும் பார்க்க

Sivakarthikeyan: ``சாதாரணமான ஒருவன் வளர்ச்சியை எட்டும்போது சிலர்தான் வரவேற்கிறார்கள்!'' - எஸ்.கே!

சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இத்திரைப்படத்தில் எஸ்.கேவுடன் ஜெயம் ரவி, அதர்வா, ஶ்ரீ லீலா எனப் பலரும் நடிக்கிறார்கள். மற்றொரு பக்கம் முருகதாஸ் இயக்கும்... மேலும் பார்க்க