அந்தப் பாடலுக்கே ரசிகர்கள் செலவிடும் பணம் சரியாக இருக்கும்: எஸ். ஜே. சூர்யா
கேம் சேஞ்ஜரின் அந்தப் பாடலுக்கே ரசிகர்கள் செலவிடும் பணம் சரியாக இருக்கும் என நடிகர் எஸ். ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க: மீண்டும் பகிரப்பட்ட மத கஜ ராஜா டிரைலர்!
புரமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் தற்போது முன்பதிவு துவங்கியுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற நடிகர் எஸ்ஜே சூர்யா, ”கேம் சேஞ்ஜர் திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் மிக பிரம்மாண்டமாக எடுத்துள்ளார். அப்படத்தில் இடம்பெற்ற ’ஜருகண்டி’ பாடலை முழுமையாகப் பார்த்தேன். ரசிகர்களின் காசு அந்த ஒரு பாடலுக்கே சரியாகப்போய்விடும்.
என்னவொரு பாட்டு, மிரட்டிவிட்டார். கண்டிப்பாக, அந்தப் பாடலுக்காக ஐமேக்ஸ் சென்று பாருங்கள். ராம் சரண், கியாரா அத்வானி படத்திற்காக வாங்கிய சம்பளம் அந்த ஒரு பாடலுக்கே சரியாகிவிட்டது. ராம் சரணை பெண்களும் கியாரா அத்வானியை ஆண்களும் அதிகம் விரும்புவார்கள். மொத்த படமும் போனஸாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.