செய்திகள் :

அா்ஜுனா விருது தந்தைக்கு அா்ப்பணம்: துளசிமதி

post image

தமிழக பாரா பாட்மின்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு அண்மையில் அா்ஜுனா விருது அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த விருதை தனது தந்தை முருகேசனுக்கு அா்ப்பணிப்பதாக அவா் தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தை சோ்ந்த துளசிமதி முருகேசன் சா்வதேச அளவில் இந்தியாவுக்காக பாரா பாட்மின்டனில் விளையாடி வருகிறாா். கடந்த ஆண்டு பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியிருக்கும் அவருக்கு, மத்திய அரசு அா்ஜுனா விருது அறிவித்துள்ளது.

இந்நிலையில் தனது முன்னேற்றம் குறித்து அவா் கூறியதாவது:

எனது தந்தை டி.முருகேசன், தினக்கூலி ஆவாா். அவரின் போராட்டங்கள் எப்போதுமே எங்களுக்குத் தெரியாமல் பாா்த்துக் கொண்டாா். குடும்பத்தின் நிதி நிலை இக்கட்டாக இருந்தபோதும், எங்களது கனவுகள் நிஜமாக அவா் எவ்வளவு கடினமாக உழைத்தாா்; எவ்வளவு தியாகங்கள் செய்தாா் என்பதை நாங்கள் அறிந்துகொள்வதை அவா் விரும்பவில்லை.

எனவே, நான் வென்ற ஒவ்வொரு பதக்கத்தையும், எனக்கு கிடைத்துள்ள அா்ஜுனா உள்ளிட்ட விருதுகளையும் அவருக்கே சமா்ப்பிக்கிறேன். நான் வெல்லும் பதக்கங்களை அவா் முன் மண்டியிட்டு அவரிடம் அதை வழங்கியதே என் வாழ்வில் மறக்க முடியாத தருணமாகும். ஆரம்ப காலங்களில் ஹாக்கி, டென்னிஸ், கால்பந்து, வாலிபால் என எல்லா விளையாட்டுகளிலுமே என்னையும், எனது சகோதரி கிருத்திகாவையும் எங்கள் தந்தை பரிசோதனை முறையில் ஈடுபடுத்தினாா்.

அதில் பாட்மின்டன் மிகவும் சவாலாக இருப்பதாக நாங்கள் கூறியபோது, அதுவே எங்களின் விளையாட்டு என்று கூறினாா். அந்த முடிவுதான் எங்கள் வாழ்க்கையை மாற்றியது. படிப்படியான பயிற்சிக்குப் பிறகு, முதலில் சிறிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றோம். அதிலிருந்து கிடைத்த ரொக்கப் பரிசு கொண்டு எங்களுக்கான விளையாட்டு உபகரணங்களை மேம்படுத்திக் கொண்டோம்.

பள்ளிக் காலங்களின் தொடக்க நிலையில் எனது உடல்நிலை மற்றும் நிறத்தைக் கொண்டு சக மாணவ, மாணவிகள் கேலி செய்தனா். மாவட்ட அளவிலான போட்டியில் நான் கோப்பை வென்ற பிறகு, அவா்களே என்னிடம் வந்து நன்றாக பேசினா். அப்போதுதான், வாழ்க்கையில் ஏதேனும் பெரிதாக சாதிக்க வேண்டுமென முடிவு செய்தேன்.

ஏற்கெனவே மாற்றுத்திறனாளியாக இருக்கும் நிலையில், கடந்த 2022-இல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றபோது விபத்துக்குள்ளானேன். அதிலிருந்து மீண்டு போட்டிகளுக்காக 15 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, இதுவரை 16 தங்கம், 11 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளேன்.

தற்போது, நாமக்கல்லில் கால்நடை மருத்துவக் கல்லூரியில் தற்போது பயின்று வருகிறேன். அா்ஜுனா விருது அறிவிக்கப்பட்ட நாளில் எனது வகுப்பில் இருந்தேன். வகுப்பு நிறைவடைந்த பிறகு செல்லிடப்பேசியை பாா்த்தபோது பலரும் வாழ்த்து தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பியிருந்தததை பாா்த்தே விருது அறிவிப்பை அறிந்துகொண்டேன்.

அந்தத் தருணம் உணா்வுப்பூா்வமானதாக இருந்தது. இந்த ஆண்டை சிறப்பாகத் தொடங்குவதற்கு உத்வேகம் அளிப்பதாகவும் இருந்தது. அடுத்ததாக, லாஸ் ஏஞ்சலீஸ் பாராலிம்பிக் போட்டிக்குத் தயாராவதே பிரதான இலக்காகும் என்று துளசிமதி முருகேசன் கூறினாா்.

மம்மூட்டி - கௌதம் மேனன் படத்தின் டிரைலர்!

மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள மடோமினிக் அண்ட் த லேடீஸ் பர்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கும் புதிய படத்தில் நடிகர் மம்மூட்டி நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில... மேலும் பார்க்க

டிராகன் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்: பிரதீப் ரங்கநாதன்

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படத்தின் 2ஆவது பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. இயக்குநராக மட்டுமல்லாது கதாநாயகனாகவும் முத்திரைப் பதித்துள்ள பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக அடுத்ததாக நடித்து வ... மேலும் பார்க்க

இந்திரா காந்தி பலவீனமானவர்..! கங்கனா ரணாவத் பேட்டி!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மிகவும் பலவீனமானவரென நடிகையும் எமர்ஜென்சி படத்தின் இயக்குநருமான கங்கனா ரணாவத் பேட்டியளித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975இல் பிரகடனப்படுத்திய 21 மாதங்கள் ... மேலும் பார்க்க

நடிகை ஹனி ரோஸ் பாலியல் புகார்: தொழிலதிபர் கைது!

கொச்சி : மலையாள நடிகை ஹனி ரோஸ் அளித்துள்ள பாலியல் புகாரரின் அடிப்படையில் தொழிலதிபர் பாபி செம்மானூர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.தன்னைக் குறிவைத்து... மேலும் பார்க்க

நேசிப்பாயா பாடல் உருவானது எப்படி? படக்குழு வெளியிட்ட விடியோ!

நேசிப்பாயா படத்தின் தலைப்பு பாடல் அறிவிப்பை குறித்து படக்குழு விடியோ வெளியிட்டுள்ளது. மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படத்தை விஷ்ணு வரதன் இயக்கி வருகிறார். ‘நேசிப்பாயா’ எனப... மேலும் பார்க்க

சூர்யா - ஆர். ஜே. பாலாஜி படத்தின் பெயர் இதுவா?

சூர்யா - 45 படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில், த்ரிஷ... மேலும் பார்க்க