லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்
யஷ் பிறந்த நாள்: டாக்ஸிக் கிளிம்ஸ் வெளியீடு!
நடிகர் யஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப், கேஜிஎஃப் - 2 படங்களில் நடித்து இந்திய சினிமாவில் ஸ்டாரானவர் நடிகர் யஷ். உலகளவில் கவனம் ஈர்த்த இப்படம் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
தொடர்ந்து, யஷ் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தன் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இதையும் படிக்க: மீண்டுமா? பொங்கல் வெளியீட்டில் புஷ்பா - 2!
டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ள இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
இந்த நிலையில், நடிகர் யஷ்ஷின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று டாக்ஸிக் படத்தின் கிளிம்ஸ் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கேளிக்கை விடுதிக்குள் டான் தோற்றத்தில் செல்லும் யஷ்ஷின் காட்சிகள் ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.