லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்
வரவேற்பைப் பெறும் காதலிக்க நேரமில்லை டிரைலர்!
இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை படத்தின் டிரைலர் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'.
ஏ. ஆர், ரஹ்மான் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற, ‘என்னை இழுக்குதடி’ பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க: யஷ் பிறந்த நாள்: டாக்ஸிக் கிளிம்ஸ் வெளியீடு!
நவீன காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜன. 14 ஆம் தேதி பொங்கலன்று வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நேற்று (ஜன. 7) வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் பெரிதாகக் கவனம் பெற்று வருகிறது. பெண்கள் பின் சுற்றும் நாயகனுக்கும் கர்ப்பமான நாயகிக்கும் இடையேயான காதல் கதையாக இது இருக்கலாம் என்பது டிரைலரில் தெரிகிறது.
சிலர், ஓகே கண்மணி போல் இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், டிரைலரில் இடம்பெற்ற, “எல்லா பெண்களும் உங்களின் பெண்ணியப் பார்வையை எல்லா விஷயத்திலும் திணிக்காதீர்கள்” என்கிற வசனம் பெண் இயக்குநர் கிருத்திகாவால் எழுதப்பட்டிருப்பது நன்றாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.