மகாராஷ்டிரா: கையோடு வரும் தலை முடி; ஒரே வாரத்தில் வழுக்கை; அச்சத்தில் கிராம மக்க...
புஷ்பா - 2: கூடுதல் 20 நிமிடக் காட்சிகள் சேர்ப்பு!
புஷ்பா - 2 திரைப்படத்தின் கூடுதல் காட்சிகளை இணைக்க உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் உலகளவில் ரூ.1,831 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டரான புஷ்பா 2 ராஜமௌலியின் பாகுபலி - 2 வசூலான ரூ. 1790 கோடியைக் கடந்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: வரவேற்பைப் பெறும் காதலிக்க நேரமில்லை டிரைலர்!
இந்த நிலையில், ஜன. 11 ஆம் தேதி முதல் புஷ்பா - 2 படத்தின் நீக்கப்பட்ட 20 நிமிடக் காட்சிகள் மீண்டும் சேர்க்கப்பட்டு திரையிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக 3.15 மணிநேரம் ஓடக்கூடிய திரைப்படமாக இருந்த புஷ்பா - 2 இனி 3.35 மணிநேரம் கொண்ட திரைப்படமாகவுள்ளது.
சங்கராந்தியை முன்னிட்டு ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் பல திரைகளில் இந்த வடிவம் திரையிடப்படலாம் எனத் தெரிகிறது.