மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மா...
பும்ரா பந்து வீசாததில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி: உஸ்மான் கவாஜா
சிட்னி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீசாததில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி என அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. சிட்னியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக் கொண்டேன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால்
மனம் திறந்த உஸ்மான் கவாஜா
தசைப் பிடிப்பின் காரணமாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சிட்னி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் விளையாடவில்லை.
இந்த நிலையில், சிட்னி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீசாததில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி என அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக பேட்டிங் செய்வது மிகவும் கடினம். ஒவ்வொரு முறையும் புதிய பந்தில் பும்ரா பந்துவீச்சை நான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. வீரர் யாருக்கும் காயம் ஏற்பட வேண்டும் என யாரும் நினைக்க மாட்டார்கள். ஆனால், ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டதுக்கு கடவுளுக்குதான் நன்றி கூறவேண்டும்.
இதையும் படிக்க: ரஷித் கான் அபார பந்துவீச்சு; டெஸ்ட் தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
சவாலான ஆடுகளத்தில் பும்ராவுக்கு எதிராக பேட் செய்வதை நினைத்துப் பார்ப்பதற்கே கடினமாக இருக்கிறது. போட்டியின் மூன்றாம் நாளில் அவர் மைதானத்துக்குள் வராததைப் பார்த்தவுடன், ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என நினைத்துக் கொண்டோம்.
நான் சந்தித்திலேயே மிகவும் கடினமான பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராதான். அவருக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு விளையாடியுள்ளேன். அப்போது, அவர் என்னை ஒரு முறை ஆட்டமிழக்கச் செய்தார். ஆனால், இந்த ஆண்டு அவரது பந்துவீச்சு வேறு விதமாக இருந்தது. அவர் மிகவும் சிறப்பாக பந்துவீசினார். ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் அவர் தனித்தனியே திட்டங்கள் வைத்துள்ளார் என்றார்.
இதையும் படிக்க: காரணம் கூறாமல் மூத்த வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாடுங்கள்: முன்னாள் இந்திய கேப்டன்
பார்டர் - கவாஸ்கர் தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி 32 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜஸ்பிரித் பும்ராவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த தொடரில் மட்டும் உஸ்மான் கவாஜாவை, பும்ரா 6 முறை ஆட்டமிழக்கச் செய்தது குறிப்பிடத்தக்கது.