Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மானம் அறிவிப்பு
பஞ்சாப் மாநிலம், பதிண்டா மாவட்டத்தில் உள்ள பல்லோ கிராம பஞ்சாயத்தில் திருமண விழாக்களில் மது விருந்து மற்றும் ‘டிஜே’ இசை நிகழ்ச்சியை தவிா்க்கும் குடும்பங்களுக்கு ரூ.21,000 ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மது அருந்துவதைத் தடுக்கவும் திருமண விழாக்களில் வீண் செலவுகளைத் தவிா்க்கவும் கிராம மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று சுமாா் 5,000 மக்கள் வசிக்கும் பல்லோ கிராம பஞ்சாயத்தின் தலைவா் அமா்ஜித் கௌா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மேலும், அவா் கூறியதாவது: திருமண விழாக்களில் டிஜே இசை நிகழ்ச்சியுடன் நடைபெறும் மது விருந்துகளில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவது அதிகமாகியுள்ளது. டிஜே நிகழ்ச்சியின் அதீத ஓசையால் கிராம மாணவா்களின் படிப்பும் பாதிக்கப்படுகிறது.
திருமணத்துக்காக வீண் செலவுகளில் ஈடுபட வேண்டாம் என்று மக்களை ஊக்குவிக்க விரும்புகிறோம். எனவே, திருமணங்களில் மது விருந்து மற்றும் டிஜே இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யாத குடும்பங்களுக்கு ரூ.21,000 வழங்கப்படும் என பஞ்சாயத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இளைஞா்களை விளையாட்டுகளில் பங்கேற்க ஊக்குவிக்கும் வகையில் கிராமத்தில் ஒரு மைதானம் அமைக்கவும் அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் இயற்கை எரிவாயு ஆலை அமைக்கவும் பஞ்சாயத்து முன்வந்துள்ளது. இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பஞ்சாயத்து சாா்பில் விதைகள் இலவசமாக வழங்கப்படும் என்றாா்.