மின்மாற்றி திருட்டு! 25 நாள்களாக இருளில் மூழ்கியுள்ள கிராமம்!
பாகிஸ்தான் பிரீமியர் லீக்: ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன் விலகல்!
பாகிஸ்தான் பிரீமியர் லீக் (பிஎஸ்எல்) தொடரில் இருந்து ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன் உள்பட நட்சத்திர வீரர்கள் 7 பேர் விலகுவதாக அறிவித்துள்ளனர். மேலும், இந்தியாவுக்கு எதிரான தொடர்கள் இருப்பதால், இங்கிலாந்து வீரர்கள் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதிக்குமா என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடர் ஏப்ரல் - மே நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடருக்கான பிளாட்டினம் பட்டியல் வரைவு ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர், இங்கிலாந்து வீரர்கள் அடில் ரசித், கிறிஸ் வோக்ஸ், வங்கதேசத்தின் முஸ்தாபிசுர் ரகுமான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா!
மேலும், ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஷார்ட், ரெய்லி மெரிடித், ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்தின் ஜேசன் ராய், கஸ் அகிட்ஸன், ஜானி பேர்ஸ்டோ, டாம் கரன், டாம் கோலெர் கேட்மோர், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், பின் ஆலென், மார்க் சாப்மேன், இலங்கையின் சரித் அசலங்கா, மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷாய் கோப் ஆகியோரும் இந்த பிளாட்டினம் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இருப்பினும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும் போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
பிஎஸ்எல் முதல் முறையாக ஐபிஎல் நடைபெறும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவிருக்கிறது. மேலும், ஐபிஎல்லில் ஏலத்தில் எடுக்கப்படாத உயர்நிலை வெளிநாட்டு வீரர்களை பிஎஸ்எல் தொடரில் விளையாடவைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
டெஸ்ட்டில் விளையாட ஆசையா? ரோஹித்துக்கு முன்னாள் வீரர் அறிவுரை!
வங்கதேச ஆல் ரவுண்டர் ஷகிப்-அல்-ஹசன் பந்து வீசுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அவர் பேட்டராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளாட்டினம் பிரிவில் கிறிஸ் லின், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, டிம் சௌதி, குசல் மெண்டிஸ், டேவிட் வில்லி, உஸ்மான் கவாஜா, சாக் கிராலி, ஜேசன் ராய், மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் அடங்குவர்.
ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி மற்றும் சில வெளிநாட்டு வீரர்கள் டைமண்ட் மற்றும் கோல்டன் பிரிவுகளில் இடம் பிடித்துள்ளனர்.