செய்திகள் :

கொலை வழக்கு : எதிர்க்கட்சிகளின் நெருக்கடி - அமைச்சரை நீக்கம் செய்ய அஜித் பவார் மறுப்பு

post image

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள மஜ்ஜசோக் கிராம பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் கடந்த மாதம் தனது வீட்டிற்கு காரில் வந்தபோது கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வால்மிக் கராட் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் தனஞ்சே முண்டேயிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தலைமறைவாக இருந்த வால்மிக் கராட் மற்றும் இக்கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுவிட்டனர்.

வால்மிக் கராடும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து பீட் மாவட்டத்தில் காற்றாலை அமைக்கும் நிறுவனங்களை மிரட்டி ரூ.2 கோடி கேட்டதாக ஏற்கனவே போலீஸில் புகார் பதிவாகி இருக்கிறது. இந்த 2 கோடி ரூபாய் மிரட்டி பறிக்க முயன்றதை தடுத்ததால்தான் பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. வால்மிக் கராட் அமைச்சர் தனஞ்சே முண்டேயிக்கு நெருக்கம் என்பதால் அவரை உடனே பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தனஞ்சே முண்டே

இதே கோரிக்கையை பீட் மாவட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ.வும் விடுத்துள்ளார். இக்கோரிக்கையை வலியுறுத்தி பீட் மாவட்டத்தில் போராட்டமும் நடந்தது. தற்போது அனைத்து கட்சி தலைவர்கள் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து அமைச்சர் தனஞ்சே முண்டேயை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரி மனு கொடுத்துள்ளனர். தனஞ்சே முண்டே தொடர்ந்து அமைச்சராக இருந்தால் இக்கொலை வழக்கு விசாரணையில் தலையிடக்கூடும் என்று அனைத்துக்கட்சி தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

இச்சந்திப்பில் பா.ஜ.க எம்.எல்.ஏ.சுரேஷ் தாஸும் கலந்து கொண்டார். ஆளுநரை சந்தித்த பிறகு சுரேஷ் தாஸ் கூறுகையில், ''அமைச்சர் தனஞ்சேயின் வீட்டில் தான் மிரட்டி பணம் பறிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது''என்றார். ஆனால் வால்மிக் கராடுடன் தனக்கு தொடர்பு இல்லை என்று அமைச்சர் தனஞ்சே முண்டே தெரிவித்துள்ளார்.

இது குறித்து சரத்பவார் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜிதேந்திர அவாட் கூறுகையில், ''சிறப்பு விசாரணைக்குழு அமைத்தபோது அதில் வால்மிக் கராட்டிற்கு நெருக்கமான மூன்று பேர் அதில் இருந்தனர். அது குறித்து கவனத்திற்கு கொண்டு வந்த பிறகுதான் அவர்களை நீக்கினர். பீட் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மோசம் அடைந்துள்ளது. சி.ஐ.டி போலீஸார் டிசம்பர் 31ம் தேதி வரை வால்மிக் கராடை கண்டுபிடிக்கவில்லை. அவராகத்தான் புனேயில் சரணடைந்தார்''என்று குற்றம் சாட்டினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் இது தொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பஞ்சாயத்து தலைவர் படுகொலை தொடர்பாக போராட்டம் நடத்தி வரும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து அனைத்துக்கட்சிகளும் நெருக்கடி கொடுத்து வருவதால் இவ்விவகாரத்தில் துணை முதல்வர் அஜித் பவாருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சந்தோஷ் தேஷ்முக்

இது தொடர்பாக அஜித் பவார் அமைச்சர் தனஞ்சே முண்டேயுடன் நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தைக்கு பிறகு அஜித்பவார் அளித்த பேட்டியில்,''கொலை தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யட்டும். அதன் அடிப்படையில் அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும்''என்று தெரிவித்தார்.

நேற்று இரவு இப்பிரச்னை குறித்து அஜித்பவார் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸையும் சந்தித்து பேசினார். இவ்விவகாரத்தில் தேவேந்திர பட்னாவிஸும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருக்கிறார். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக அஜித் பவார்தான் முதல் ஆளாக ஆதரவு தெரிவித்தார். இதனால் பட்னாவிஸ் சற்று தயங்கிக்கொண்டிருக்கிறார். ஆனால் எதிர்க்கட்சிகளின் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

திமுக செயல்பாடுகள் : எதிர்க்கும் தோழமைகள் - நெருக்கடியில் ஸ்டாலின்?

எதிர்க்கும் தோழர்கள்:`அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா?’ மார்க்சிஸ்ட் கட்சியினர் கடந்த சில மாதங்களாகவே ஆளும் அரசைக் கடுமையாக விமர்சித்து வந்தனர். அதிலும், சாம்சங் தொழிற்சாலை விவகாரத்திலிருந்து விமர்சனம்... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : `மீண்டும் ஈ.வி.கே.எஸ் குடும்பமா?’ காங்கிரஸ் வேட்பாளர் ரேஸில் யார் யார்?

ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ-வாக இருந்த திருமகன் ஈவேரா காலமானதையடுத்து இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த 14.12.20... மேலும் பார்க்க

"சுயநல தலைவர்களால் கம்யூனிசம் நீர்த்துப்போய்விட்டது"- ஆ.ராசா பேச்சுக்கு கம்யூனிஸ்ட் எதிர்வினையென்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில், அக்கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெ. சண்முகம், ``போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை அரசியல் சாசனத்தில் உள்ளவை. அந்த அடிப்பட... மேலும் பார்க்க

IT RAID; டெல்லி Twist - அண்ணாமலை, எடப்பாடி இருவருக்கும் செக் வைக்கும் BJP தலைமை? | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* - கவர்னர் ரவிக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க* - டங்ஸ்டன் விவகாரம்... விவசாயிகள் பேரணி!* - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம்... மேலும் பார்க்க

Anbumani: "பாமகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா?" - தமிழக காவல்துறைக்கு அன்புமணி கண்டனம்

பா.ம.க போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறை, தி.மு.க போராட்டத்துக்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன்? ஆட்சியாளர்கள் என்றால் வானத்திலிருந்து குதித்தவர்களா? என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெர... மேலும் பார்க்க