மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மா...
இந்தியர்களின் உளவியல் யுக்தி (2 vs 11) பலனளிக்கவில்லை: மிட்செல் ஜான்சன்
புதிதாக அணியில் இணைந்த சாம் கான்ஸ்டாஸ், பியூ வெப்ஸ்டரை அச்சுறுத்தி வெற்றிபெறலாம் என நினைத்த இந்தியர்களின் உளவியல் யுக்தி பலனளிக்கவில்லை என முன்னாள் ஆஸி. வீரர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என வெற்றி பெற்றது. இதில் 4ஆவது போட்டியில் 19 வயதான சாம் கான்ஸ்டாஸ் அறிமுகமாகி அரைசதம் அடித்து அசத்தினார்.
5ஆவது போட்டியில் ஆல் ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் அறிமுகமாகி முதல் இன்னிங்ஸில் அரைசதமும் 2ஆவது இன்னிங்ஸில் 39 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.
இவர்கள் இருவர் மீதும் இந்திய அணியினர் உளவியல் தாக்குதல் நடத்தினர். குறிப்பாக சாம் கான்ஸ்டாஸ் மீது அதிகமாக நடந்தது. அவரைச் சுற்றி 11 பேரும் கத்திக்கொண்டு கவாஜா விக்கெட்டைக் கொண்டாடியது முக்கியமான தருணமாகப் பார்க்கப்படுகிறது.
இது குறித்து ஆஸி. முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் கூறியதாவது:
இந்தியர்களின் உளவியல் யுக்தி (2 vs 11)
2 பேருக்கு எதிராக 11 நபர்கள் என்ற இந்திய அணியின் யுக்தி ஆஸி. பேட்டர்களை அழுத்தத்திலும் தனித்து விடவும் முயற்சித்தது. எதிரணியினரின் தொழில்நுட்ப திறமைகளை சோதிப்பது மட்டுமல்லாமல் அவர்களது மன வலிமையையும் சோதிப்பதிலும் இந்திய அணியினர் முனைப்பு காட்டினர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பேட்டரின் கவனத்தை திசைதிருப்புவது மிகவும் முக்கியமானது. விளையாட்டில் உடல் பலத்தைப் போலவே மன பலமும் முக்கியமென்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளன. புதியதாக அணியில் சேர்ந்த சாம் கான்ஸ்டாஸ், பியூ வெப்ஸ்டரை அச்சுறுத்த நினைத்த இந்தியர்களின் உளவியல் யுக்தி பலனளிக்கவில்லை.
அணியின் சக வீரருக்காக சாம் கான்ஸ்டாஸ் ஆதரவாக நின்றதை நான் பாராட்டுகிறேன். ஆனால், அது ஒரு தவறான நேரத்தில் நடந்துவிட்டது. நாளின் கடைசி கட்ட நேரத்தில் யாராவது ஒருவர் மட்டுமே வெற்றிபெற முடியும்.
இந்த மாதிரி சூழ்நிலைகளை எப்படி கடக்க வேண்டுமென கவாஜா அல்லது யாராவது மூத்த வீரர் கான்ஸ்டாஸிடம் சென்று பேசியிருப்பார்களா என்பது ஆச்சரியமே. அணியில் ஒரு புதிய வீரரை சேர்க்கும்போது இது மிகவும் முக்கியமானது.
போட்டியில் இந்த மாதிரி சூழ்நிலைகளில் எப்படி இருக்க வேண்டுமென அனுபமிக்க வீரர்கள் அறிவுரை வழங்க வேண்டும்.
இளமையும் அனுபவும் காடும் வெப்ஸ்டர்
ஆஸி.காக வெற்றிக்கான ரன்னை அடிக்க வெப்ஸ்டரை விடவும் யாரும் தகுதியானவர்கள் இல்லை. பேக்கி கிரீன் தொப்பியை பெற்று தனது கனவு அறிமுகமான போட்டியில் பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார். ஃபீல்டிங்கிலும் அசத்தினார்.
சிடினியில் அறிமுகமானது அவருக்கு தனிப்பட்ட முறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக அவரே கூறியிருந்தார். அவர் ஆஸி.க்கான தொப்பியை பெற்றது மட்டுமில்லாமல் சிறப்பாகவும் விளையாடி கவனம் பெற்றார்.
செய்தியாளர்கள் சந்திப்பிலும் வெப்ஸ்டர் நன்றாக பேசினார். அறிமுக போட்டியாக இருந்தாலும் அதுவும் சாதாரண ஒரு போட்டியாக எடுத்து அழுத்தமில்லாமல் விளையாடினார். 31 வயதில் வெப்ஸ்டர் அனுபவத்தையும் இளமைக்கான ஆற்றலையும் கொண்டு வந்திருக்கிறார்.
வெப்ஸ்டரின் தளர்வான மனப்பாங்கு அணிக்கு சொத்தாக இருக்கிறது. ஓய்வறையில் அவர் ஒரு வீரராக மட்டுமில்லாமல் உத்வேகம் அளிக்கும் நபராகவும் இருக்கிறார். அணிக்கு நன்றாக பொருந்திப்போயிருக்கும் வெப்ஸ்டர் வருங்காலங்களில் முக்கியமான வீரராக இருப்பார் என்றார்.