மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மா...
ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக் கொண்டேன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக் கொண்டதாக இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. சிட்னியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையும் படிக்க: ரஷித் கான் அபார பந்துவீச்சு; டெஸ்ட் தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த டெஸ்ட் தொடரில் 391 ரன்கள் குவித்தார். அவரது சராசரி 43.44 ஆக உள்ளது. பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரராகவும் அவர் உள்ளார். பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் எடுத்து அசத்தினார். அந்தப் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
வலிமையாக திரும்பி வருவோம்
முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆஸ்திரேலியாவில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும், இந்திய அணி மீண்டும் வலிமையாக திரும்பி வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ஸ்வால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ஆஸ்திரேலியாவில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். துரதிருஷ்டவசமாக, நாங்கள் எதிர்பார்த்த முடிவு எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால், நாங்கள் வலிமையாக மீண்டு வருவோம் எனப் பதிவிட்டுள்ளார்.