தில்லியில் வென்றால் ரூ. 25 லட்சம் மருத்துவக் காப்பீடு: காங்கிரஸ் வாக்குறுதி!
BB Tamil 8: பிக் பாஸில் மீண்டும் என்ட்ரி ஆன அர்ணவ்; எதிர்க்கும் போட்டியாளர்கள்; என்ன நடந்தது?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 93வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கான முதல் போட்டியாளராக ரயான் தேர்வாகி இருக்கிறார். இந்த சீசனின் கடைசி போட்டியாளராக வந்து, இப்போது முதல் பைனலிஸ்டாக இவர் மாறி இருக்கிறார்.
இதனிடையே ராணவ், மஞ்சரி ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று (ஜனவரி 6) வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என்ட்ரி கொடுப்பார்கள் என்று சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று (ஜனவரி 7) வெளியான முதல் புரோமோவில் சுனிதா, வர்ஷினி இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தனர்.
தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது புரோமோவில் அர்ணவ் உள்ளே சென்றிருக்கிறார். வீட்டிற்குள் நுழைந்த உடன் ஜெஃப்ரி எங்கே என்று கேட்கிறார் அர்ணவ். அதற்கு, "வெளியே இருந்து நீங்க நிறைய பார்த்திட்டு வந்திருப்பீங்க; ஆனா அதை இங்க பேசாதீங்க" என்று ஜாக்குலின் சொல்ல, அர்ணவ் "எனக்குப் பேச எல்லா உரிமையும் இருக்கிறது" என்கிறார்.
அர்ணவிற்கு எதிராக ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் பேசவும், "ஜெஃப்ரி பண்ணத கேட்கல. நான் பேசுறத மட்டும் எல்லோரும் தட்டி கேப்பீங்களோ" என்று அர்ணவ் கோபப்படுகிறார். என்ன நடக்கிறது என்பதை இன்றைய எபிஷோடில் பார்ப்போம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...