செய்திகள் :

BB Tamil 8 Day 92: PR Team சர்ச்சை; கண்ணீர் விட்ட சவுந்தர்யா; முத்து - ரயான் - ஆட்டம் ஆரம்பம்

post image
கிளைமாக்ஸ் நெருங்குவதால் பல டிவிஸ்ட்டுகளைத் தந்து சுவாரசியத்தைக் கூட்ட பிக் பாஸ் டீம் கருதுகிறது போல. அதில் ஒன்றுதான் ‘Wildcard Knockout’. முன்னாள் போட்டியாளர்கள் ‘விருந்தினர்களாக’ அல்லாமல் போட்டியாளர்களாக உள்ளே வருவது வீட்டாருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. என்றாலும் நடுக்கத்தை மறைத்துக் கொண்டு ‘வாங்கடா பார்க்கலாம்’ மோடில் இருக்கிறார்கள்.

இப்போது நுழைகிற முன்னாள் போட்டியாளர்கள், மேடையேற வாய்ப்பு இல்லையென்றாலும் ஆட்டத்தின் சமநிலையைக் குலைக்க முயல்வார்கள் என்று தோன்றுகிறது. 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 92

வில்லங்கமான மார்னிங் ஆக்டிவிட்டி. ‘எந்தப் போட்டியாளர்கள் வெளியில் PR Team வைத்து சமூக வலைதளங்களில் மைலேஜை ஏற்றிக் கொள்கிறார்?’ என்று ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும். எனக்கென்னமோ இது சவுந்தர்யாவை ஃபோகஸ் செய்து வைக்கப்பட்ட ஆப்பு என்று தோன்றுகிறது. 

ரயான், தீபக்

பிக் பாஸ் என்பது புறஅழகிற்காக நடத்தப்படும் போட்டியல்ல. ஒருவரின் அகம் சார்ந்த ஆளுமைத்திறன் எத்தனை நுட்பமாகச் செயல்படுகிறது என்பதை சோதனை செய்யும் போட்டி. ஏன், உலக அழகிப் போட்டிகளில் கூட இறுதிக் கட்டத்திற்கு வருபவரின் அறிவு, சமயோசிதம், சிந்தனை போன்றவை சோதிக்கப்படும்படுடியான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. 

இந்த நோக்கில் பார்த்தால் சவுந்தர்யா மிக பலவீனமான போட்டியாளர். அவரால் எதையும் எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆட்டத்திலும் திறமை போதவில்லை. அவருடைய புற அழகும் ரியாக்ஷன்களும் கோணங்கித்தனங்களும், சில தடாலடியான விவாதங்களும் அவரைக் காப்பாற்றி வருகின்றன. ஆனால் இது மட்டுமே பிக் பாஸிற்கு போதுமா என்றால் போதாது. என்றாலும் எப்படி அவர் தொன்னூறு நாட்களைக் கடந்து உள்ளே இருக்கிறார்? அதிலும் மஞ்சரி போன்ற வலிமையான போட்டியாளர்கள் சென்றாலும்கூட இவரால் எப்படி தாக்குப் பிடிக்க முடிகிறது? 

PR Team மூலம் சவுந்தர்யா காப்பாற்றப்படுகிறாரா?

சவுந்தர்யாவின் PR Team பலம் பற்றி சமூகவலைத்தளங்களில் ஆரம்பம் முதலே பேசப்பட்டு வருகிறது. இந்தக் கட்டுரைத் தொடரில் கூட நான் அதிகம் வசைகளைப் பெற்றது, சவுந்தர்யா பற்றிய விமர்சனங்களின் போதுதான். முத்து உட்பட மற்ற போட்டியாளர்கள் தொடர்பாகக்கூட காட்டமான பின்னூட்டங்கள் வந்திருந்தாலும் ‘இங்க தொட்டா அங்க வலிக்கும்’ என்பது மாதிரி சவுந்தர்யா பற்றிய விமர்சனங்களுக்குத்தான் கணிசமான எதிர்ப்பு வரும். 

சவுந்தர்யா

இது ஒரு பக்கம் இருக்கட்டும். ஒருவர் PR Team வைத்துக் கொள்வது தவறா? இல்லவே இல்லை. போட்டி நிறைந்த உலகில் ஒருவர் தன்னை பிரத்யேமாக கவனப்படுத்த, வித்தியாசமாக காட்டிக் கொள்ள, சக போட்டியாளர்களிடமிருந்து முந்தி நிற்க, பலருக்கும் அறிமுகமாவதற்கு விளம்பரம் தேவைப்படுகிறது. ஆனால் விளம்பரம் போன்ற வணிக உத்திகளின் மூலம் தகுதியற்ற ஒன்று வெற்றி பெறும் போதுதான் அதன் மீது கேள்வியும் கோபமும் வருகிறது. 

சவுந்தர்யா என்றல்ல, அருண், பவித்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் PR Team வைத்திருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் வெற்றியை நோக்கி முன்னேறுகிறார்கள் என்று சொல்வது ஒருவகையில் மக்களை இழிவுப்படுத்துவதுதான். பல்வேறு உத்திகளின் மூலம் பார்வையாளர்களை எளிதில் ஏமாற்றிவிட முடியும், தகுதியற்றதை தலையில் கட்டிவிட முடியும் என்று பொருளாகிறது. 

உத்திகளும், மோசடிகளும் ஆசை காட்டும் ஆஃபர்களும் நிறைந்திருக்கும் காலக்கட்டத்தில் நுகர்வோன்தான் விழிப்பாக இருக்க வேண்டியிருக்கிறது. இதுவே பிக் பாஸ் ஆட்டத்திற்கும் பொருந்தும். தகுதியற்ற ஒரு நபர்,  PR Team பலத்தினால் இறுதி வரை தொடர்கிறார் என்றால் பார்வையாளர்களின் கணிசமான பகுதி யோசித்து வாக்களிக்கவில்லை என்று பொருள். தகுதியான போட்டியாளரை புறந்தள்ளி விட்டு புறஅழகு உள்ளிட்ட காரணங்களுக்காகத் தகுதியற்ற போட்டியாளரை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள் என்று பொருளாகிறது. PR Team-க்கும் உண்மையான ரசிகர்களுக்கும் உள்ள வித்தியாசத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரை ஆதரித்தாலே அவரை PR என்று முத்திரை குத்துவது முறையல்ல. 

டார்கெட் செய்யப்பட்டதால் கண்ணீர் விட்ட சவுந்தர்யா

இந்த டாஸ்க்கில் பெரும்பாலான சக போட்டியாளர்கள், சவுந்தர்யாவை குறிப்பிட்டதில் இருந்து அவர்களுக்கும் இது குறித்த எண்ணம் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. முதலில் எழுந்த விஷால், சவுந்தர்யாவிற்காக ‘ரவீந்தர்’ கூட PR ஆக இருக்கலாம் என்று அதிரடியாக ஆரம்பித்தார். நம்பியார் வாய்ஸில் வந்த தீபக்கும் சவுந்தர்யாவை கை காட்டினார். ரயான், சவுந்தர்யாவோடு அருணையும் முத்துவையும் சேர்த்துக் கொண்டார். அடுத்து வந்த பவித்ராவும் அதே கருத்தை பிரதிபலித்தார். 

‘வைல்ட் கார்ட் என்ட்ரியில் வந்தவர்கள் சொன்ன விஷயங்களை வைத்துப் பார்க்கும் போது சவுந்தர்யாவிற்கு பலமான PR டீம் இருக்க வாய்ப்பிருக்கிறது’ என்று லாஜிக்காக சொன்னார் முத்து. பவித்ராவும் ஜாக்குலினும் இன்ஸ்டாவில் பிரபலமாக இருப்பதால் அவர்கள் வைத்திருக்க வாய்ப்புண்டு என்ற அருண், என்னதான் பி.ஆர் இருந்தாலும் நாம இங்க கன்டென்ட் தரலைன்னா உபயோகமில்லை’ என்று சொன்னதில் இருந்து கன்டென்ட்டின் முக்கியத்துவத்தை அவர் அறிந்திருப்பதை உணர முடிகிறது. 

கடைசியாக பதில் சொல்ல வந்தார் சவுந்தர்யா. அவரது டிபெஃன்சிவ் மோட் பதில் அருமையாக இருந்தது. “இங்க இருக்கறவங்க சிலர் ஃபெமிலியர் ஃபேஸ். அவங்களுக்கு ஆல்ரெடி ஃபேன்ஸ் இருப்பாங்க. இல்லாதவங்க.. மக்கள் கிட்ட போறதுக்கு ஏதாவது செஞ்சுதான் ஆகணும். நான் பண்ற விஷயங்கள் ஆடியன்ஸிற்கு பிடிச்சிருக்கும். நான் மக்களைத்தான் பிஆரா பார்க்கறேன்.” என்று சாமர்த்தியமாக பதில் சொன்ன சவுந்தர்யா, அருண், முத்து, ஜாக் ஆகிய மூவரையும் இந்த டாஸ்க்கில் இணைத்தார். 

தன்னையே பலரும் டார்கெட் செய்ததால் சவுந்தர்யா கண்ணீர் விட்டது பரிதாபம் என்றாலும் இன்னொரு பக்கம் ‘எங்க அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போல் அந்தக் கண்ணீரே காட்டிக் கொடுத்து விட்டது. அவரை சமாதானப்படுத்த ரயான் வந்த போது, அவசரம் அவசரமாக கண்ணீரை துடைத்துக் கொண்டு நெருப்புக்கோழி போல தலையைப் புதைத்துக் கொண்டார். “இதுல தப்பு, சரின்னு எதுவுமே இல்லை’ என்று ஆறுதல் சொன்னார் ரயான். “பிக் பாஸ் முடியுதுன்னு அழறியா?” என்று போட்டு வாங்கிய தீபக், “இது தப்பு கிடையாது. புத்திசாலித்தனம்தான்” என்று சமாதானப்படுத்த “நான் இத்தனை நாள் இருந்ததுக்கு இதுதான் காரணம்ன்னு ஆயிடுதுல்ல” என்று வருந்தினார் சவுண்டு. 

போனா வராது… பொழுது போனா கிடைக்காது’

அவரவர்கள் பெயர் போட்ட காஃபி கோப்பைகள் வரவும் ‘மூவி டைம்’ என்று மக்கள் சந்தோஷப்பட்டார்கள். இல்லை. ‘இது கடைசி வார நாமினேஷன். சிந்திச்சு வாக்களிங்க’ என்று பிக் பாஸ் ஜொ்க் தர, ‘என்னடா இது எல்லோரும்தான் நாமினேட் ஆவாங்கன்னு சொன்னீங்க?’ என்று சவுந்தர்யா முனக “சும்மா லுலுவாய்க்கு. எல்லோருமே நாமினேட் ஆகியிருக்கிறீர்கள்” என்று வேடிக்கை காட்டிய பிக் பாஸ் “இனி நீங்கள் எல்லோரும் மக்கள் வசம். எண்டர்டெயின்மென்ட் மூலம் அவர்களை நீங்கள் கவர வேண்டியதான் முக்கியம்” என்று சொல்ல “இனிமேதான் கவரணுமா?” என்று ஐயம் எழுப்பினார் சவுந்தர்யா. “ஆம்.கடைசி வாரத்தில் அது தெரியும். ஓகேவா சவுந்தர்யா?” என்று பிக் பாஸ் நக்கலடிக்க சங்கடத்துடன் புன்னகைத்தார். 

‘ரயானுக்கு ஒண்ணும் கவலையில்லை. அவன் ஃபைனலிஸ்ட்’ என்கிற பொறாமையை சந்தோஷப் போர்வையில் மக்கள் வெளிப்படுத்தினார்கள். அவருமே தன்னை நிரூபித்தால்தான் இறுதிக்கோட்டை தொட முடியும். “எவ்வளவுக்கு முடியுமோ, அந்த அளவிற்கு முழுமையாக உங்களை வெளிப்படுத்துங்கள். இந்த வீட்டின் கதவுகள் விரைவில் மூடிக் கொள்ளும். அதற்குள் உங்களுக்கு தரப்பட்ட வாய்ப்பை சரியாகப் பயன்படுத்துங்கள். எண்டர்டெயின்மென்ட் மூலம் மக்களை கவருங்கள்” என்று ‘போனா வராது… பொழுது போனா கிடைக்காது’ என்கிற பாணியில் போட்டியாளர்களை பிக் பாஸ் உத்வேகப்படுத்த அனைவரும் உணர்ச்சி ததும்ப நின்றிருந்தார்கள். 

“உன் மேல் வரும் விமர்சனங்களைக் கண்டு பயப்படுறியா.. தப்புன்னு தெரிஞ்சும் ஏன் சமாளிக்கற?” - முத்துவிடம் இப்படியாக இண்டர்வியூ எடுத்தார் சவுந்தர்யா. ஒரு மார்க் கேள்விக்கு வழக்கம் போல் நான்கு பக்கத்திற்கு விடையளித்தார் முத்து. “எனக்கு மக்களோட அறிமுகமும் அன்பும் வேணும். அதே சமயத்தில் பொருந்தாத விமர்சனங்களை உடனே ஏற்க முடியாது. அதன் நியாயங்கள் பற்றி யோசிப்பதற்கு நேரம் தேவை. தப்புன்னு எனக்கு பட்டா உடனே மன்னிப்பு கேட்டுடுவேன். தண்டனையைக் கூட ஏத்துப்பேன்” என்று முத்து வியாக்கியானம் அளித்துக் கொண்டிருக்க, இன்னொரு முனையில் இதே விஷயத்தைப் பற்றி ரயான் பேசிக் கொண்டிரு்நதது தற்செயல் சுவாரசியம். 

முத்து - ரயான் - ஆட்டம் ஆரம்பம்

“மண்டையைக் கழுவ உக்காந்துட்டான் போல. யார் ஒப்பினியன் கம்மியா சொல்வாங்களோ, அவங்க கிட்ட பேசுவான். தப்பு பண்ணிட்டா உடனே ஒத்துக்க மாட்டான்” என்று முத்துவைப் பற்றி ஜாக்கிடம் புறணி பேசினார் ரயான். போட்டி என்பது இப்போது முத்து x ரயான் என்றாகி விட்டதால் இருவரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள் போல. 

ஷாப்பிங் டாஸ்க். ‘சுத்த விடாதீங்க’ என்பது விசே அடிக்கடி சொல்லும் வாக்கியம். இங்கு அப்படி சுற்ற விட்டார்கள். சுற்றி அடுக்கப்பட்டிருக்கும் கோன்களில் ஷாப்பிங் மதிப்பு இருக்கும். பந்தை உதைப்பதன் மூலம் எந்தக் கோனில் அது படுகிறதோ, அதன் மதிப்பு புள்ளிகளாக கிடைக்கும். பந்தை உதைப்பதற்கு முன்பாக அவரை ஐந்து முறை சுற்றி விடுவார்கள். அந்த மயக்க நிலையிலேயே பந்தைக் கையாள வேண்டும் என்பதுதான் ஆட்டம். 

தீபக், முத்து, அருண் என்று வரிசையாக வாய்ப்புகளை தவற விட்டார்கள். ‘போச்சா.. சோனாமுத்தா.. சோறு போச்சா’ என்று அனைவரும் பதறும் போது ஆறுதல் பரிசாக 2000 புள்ளிகள் கொண்ட கோனை அடித்து அடிப்படையான சோற்றுக்கு வழி செய்தார் ரயான். ஆனால் அது போதாதா? குழம்பிற்கு என்ன வழி?

போட்டியாளர்களின் மீது கருணை ஏற்பட்டது போன்ற பாவனையுடன் இரண்டாவது சான்ஸ் தந்தார் பிக் பாஸ். இந்த முறை தலைசுற்றல் இல்லை. இதிலும் பலர் சொதப்பினாலும் கூடுதலாக 4000 புள்ளிகள் கிடைத்தன. ஆக மொத்தம் 6000 பாயிண்ட்டுகள். இது இவர்களுக்கே போதாது என்னும் போது அடுத்ததாக கூடுதல் ஆட்களை வரவழைத்து சமையல் பொருட்களை பற்றாக்குறை ஏற்படும்படியான காரியத்தைச் செய்தார் பிக் பாஸ். 

ஷாப்பிங் முடிந்ததும் கார்டன் ஏரியாவில் ‘ஹாயாக’ படுத்திருந்த இணைபிரியா நண்பர்களான அருணும் விஷாலும் ‘பணப்பெட்டி’ பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். சவுந்தர்யா, ரயான், பவித்ரா ஆகியோர் எடுக்கலாம் என்பது இவர்களின் யூகம். ‘35 லட்சம் வந்தா நான் எடுப்பேன்’ என்று அருண் பேராசைப்பட ‘அஸ்க்கு புஸ்க்கு’ என்றார் விஷால். 

போட்டியாளர்களுக்கு ஷாக் தந்த பிக் பாஸ்

சபையைக் கூட்டிய பிக் பாஸ், ‘இது வரை நடக்காத விஷயம் நடக்கப் போகிறது’ என்று அதிர்ச்சி வெடிகுண்டை வீச ஆரம்பித்தார். வழக்கமாக முன்னாள் போட்டியாளர்கள் விருந்தினர்களாக வந்து தங்கி விட்டு டாட்டா சொல்லி புறப்பட்டு விடுவார்கள். அதற்குள் பழைய வம்புகள், சண்டைகள் பற்றிக்கொண்டு எரிந்து விடும். இதுதான் வழக்கம் இல்லையா? ஆனால் இந்த முறை அவர்களில் சிலர் போட்டியாளர்களாக உள்ளே வரப் போகிறார்களாம். அதாவது ‘Wildcard Knockout’. 

இந்த அறிவிப்பை உற்சாகமாக செய்த தீபக் “யாராவது கைத்தட்டுங்கப்பா” என்று கேட்க, யாரும் கைத்தட்டும் மூடில் இல்லாமல் ஷாக்கில் இருந்தார்கள். வெளியே இருந்து வருபவர்கள் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு வருவதால் அதன் சாதகங்களோடு வருவார்கள். ஏற்கெனவே இருப்பவர்களில் இரண்டு நபர்கள் வெளியேறக்கூடும். உங்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால் எண்டர்டெயின் செய்வதுதான் முக்கியமான வழி’ என்று அறிவித்தார் பிக் பாஸ். 

“மறுபடியும் மொதல்ல இருந்தா?” என்று வாயைப் பிளந்தார் ஜாக். கூட்டணி வெச்சா திட்டினீங்க. இப்ப அதான் வழி” என்றார் விஷால். ஒரு பொது எதிரி வரும் போது, தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து ஒன்று கூடி நிற்பது போல வீட்டிற்குள் இருப்பவர்கள் வெளியில் இருந்து வரும் எதிரிகளை விரட்டியடிப்பதற்காக ஒன்று கூடி நிற்கும் மோடிற்கு மாறினார்கள். “அவங்க எல்லாத்தையும் பார்த்துட்டு வர்றதால வெறியோடு வருவாங்க” என்றார் தீபக். “நாம என்ன தக்காளி தொக்கா. இறங்கி செய்வோம்” என்று சூளுரைத்தார் முத்து. 

“இன்னமும் 5 நாள்தான் இருக்கு. ஃபுல் எனர்ஜியோடு விளையாடுவோம்” என்று இதன் சீரியஸ் புரிந்து அனைவரும் போட்டி மனப்பான்மைக்கு தாவினார்கள். 

அர்னவ் மீது கொலைவெறியோடு இருக்கும் அருண்

இந்த மாற்றத்தை ஊதிப் பெருக்குவது போல புதிய டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். பொதுவாக வெளியில் இருந்து வருபவர்கள்தான், வீட்டிற்குள் இருப்பவர்களை வறுத்தெடுப்பார்கள். ஆனால் இந்த முறை அவர்கள் வருவதற்கு முன்பே வறுத்தெடுப்பதற்கு வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. 

வர்ஷினி, ரவி, அர்னவ், தர்ஷா, சாச்சனா, சிவா, சுனிதா, ரியா என்று முன்னாள் போட்டியாளர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. எனில் இவர்களில் இருந்துதான் சிலர் உள்ளே வருவார்கள் என்று தோன்றுகிறது. அல்லது இதிலேயும் கூட டிவிஸ்ட் இருக்கலாம். 

புதிய விருந்தினர்களை வரவேற்பதற்காக வில்லங்கமான வாக்கியங்கள் இருந்தன. யாருக்கு எது பொருந்தும் என்பதை ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும். ‘விளையாடவும் தெரியாது. சும்மாவும் இருக்க மாட்டே’, ‘வீட்ல பொியவங்க இருந்தா கூட்டிட்டு வா’, ‘ஏதாவது மேக்கப் பொருளை விட்டுட்டு போயிட்டியா?’ என்று முன்னாள் போட்டியாளர்களை சீண்டும் விதமாக வாக்கியங்கள் இருந்தன. இதன் மூலம் இரு அணிக்கும் இடையே பகைமையை மூட்டி விட வேண்டும் என்பது பிக் பாஸின் நோக்கம். 

முதலில் இந்தச் சடங்கை ஆரம்பித்து வைத்து ரகளையாக கமெண்ட் செய்தார் முத்து. சவுந்தர்யா சொல்லும் போது அர்னவ்வின் பெயருக்குப் பதிலாக அருணின் பெயரைச் சொல்லி சிரிப்பலையை மூட்டினார். இதைப் போலவே ராணவ்வின் பெயரை தவறுதலாக ரயான் சொல்ல “டேய் அவன் வெளியே போயே ரெண்டு நாள்தான் ஆவுது” என்று சிரித்தார்கள். அர்னவ்விற்குப் பதிலாக ராணவ்வை சொல்லி விட்டார். (அவ்வ்வ்வ்வ்!) “வீட்ல இருந்து பொியவங்களை வரச் சொல்லு’ வாக்கியத்திற்கு பெரும்பாலோனோர், சாச்சனாவை தேர்ந்தெடுக்க அருணோ அர்னவ்வை தேர்ந்தெடுத்து சிரிப்பு மூட்டினார். 

BBTAMIL 8: DAY 92

“டேய் ஜால்ராஸ்” என்று எவிக்ட் ஆகும் போது அர்னவ் சொல்லி விட்டுச் சென்றது பலரையும் காயப்படுத்தியிருக்கிறது. ‘உள்ளே வரட்டும். வெச்சு செய்வோம்’ என்கிற கொலைவெறியில் அருண் இருக்கிறார். மற்றவர்களுக்கும் ஏறத்தாழ இதே எண்ணம்தான். ஆக அர்னவ் உள்ளே வந்தால் ஜாலியான கலவரங்கள் நிச்சயம் நிகழும். எனவே பிக் பாஸ் டீம் எப்படியாவது அவரை வரவழைக்கும் என்று தோன்றுகிறது.

விஷாலும் ஜாக்கும் ‘வாக்கிங்’ பாவனையில் தங்களிடமுள்ள மனஸ்தாபங்களைப் பேசி பழைய காயங்களை ஆற்றிக் கொண்டது போன்ற பாவனையைச் செய்தார்கள். 


இன்றைய பிரமோவில் முதல் விருந்தினராக சுனிதா உள்ளே வந்து அனைவரையும் ரகளையாக ‘வெச்சு செய்யும்’ காட்சியைப் பார்க்க முடிகிறது. எனில் கலாட்டா கியாரண்ட்டி. Get ready folks! 

BB Tamil 8: `விதியை மீறிட்டீங்க வெளிய வந்திருங்க'- பிக் பாஸின் அதிரடி அறிவிப்பு; காரணம் என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 94-வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 93: `மிட் வீக் எவிக்சன்' அராஜகம் செய்த அர்னவ் - போட்டியாளர்களுக்கு நேர்ந்த சங்கடம்

இந்த எபிசோட், ‘பழிக்குப் பழி, புளிக்குப் புளி’ மோடில் இருந்தது. வெளியில் இருந்து வந்தவர்கள், பழைய காயங்களை மீண்டும் கிளறி ரத்தத்தின் ருசியைப் பார்த்தார்கள்.இதை கரிசனத்தோடும் மிருதுவாகவும் செய்தவர்கள் ... மேலும் பார்க்க

Siragadikka Aasai: புதிய காதல் கதை; ரோகிணி பஞ்சாயத்து - நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன?

சிறகடிக்க ஆசை சீரியலின் நேற்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரோகிணியும், மனோஜும் பணத்தைப் பற்றி விவாதிக்கின்றனர். எப்படி பணத்தைப் புரட்டுவது, எப்படி ஏமாற்றிய நபரைக் கண்டுப்பிடிப்பது என பேசிக் கொண்டிருக்கிறார... மேலும் பார்க்க

BB Tamil 8: சூர்யாவாக அருண்; த்ரிஷாவாக சௌந்தர்யா - பிக் பாஸ் வீட்டில் `ஆடிய ஆட்டம் என்ன?’

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 94-வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கான... மேலும் பார்க்க

BB Tamil 8: ``அறம் அறம்னு அறுக்குறியே தவிர நீ செய்ற எதுலயும் அறம் இல்ல"- முத்துவை சாடிய சிவகுமார்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 93வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்... மேலும் பார்க்க

Siragadikka aasai : மனோஜைக் காப்பாற்றிய முத்து... நன்றி உணர்வு இல்லாத ரோகிணி

சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில் மனோஜ், ரோகிணி ஷோரூமில் இருக்கும் போது, அங்கு ரவி, ஸ்ருதி வருகின்றனர். முத்துவும் மீனாவும் வர சொன்னதாக சொல்கின்றனர்.சற்று நேரத்தில் முத்து, மீனா அண்ணாமலை, விஜய... மேலும் பார்க்க