வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடைகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை
18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் சென்ற மே.இ.தீ. அணி!
மே.இ.தீ. அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாட பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. இன்று (ஜன.6) மே.இ.தீ. அணி இஸ்லாமாபாத் சென்றடைந்தது.
இதற்கு முன்னதாக 2006ஆம் ஆண்டு மே.இ.தீ. அணி பாகிஸ்தானில் டெஸ்ட் தொடர் விளையாடியிருந்தது. இதற்கிடையில் 2 வெள்ளைப் பந்து கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் டெஸ்ட் போட்டி ஜன.17ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக பாகிஸ்தான் ஏ அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆடவிருக்கிறது.
இரண்டாவது டெஸ்ட் ஜன.25ஆம் தேதி தொடங்குகிறது. இந்த 2 டெஸ்ட் போட்டிகளும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 போட்டிகளுக்குள் அடங்கும். இதுதான் இந்த 2 அணிகளுக்குமான இந்த 2025 சாம்பியன்ஷிப்பின் கடைசி போட்டிகளாகும்.
பாகிஸ்தான். மே.இ.தீ. அணிகள் முறையே உலக டெஸ்ட் தரவரிசையில் கடைசி இடமான 8,9ஆம் இடங்களில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மே.இ.தீ. அணி:
க்ரைக் பிரத்வெயிட் (கேப்டன்), அலிக் அதான்ஸா, கீஸ் கார்டி, ஜோஷுவா டீ சில்வா, ஜஸ்டின் கிரீவ்ஸ், கவேம் ஹோட்ஜ், டெவின் மலாக், ஆமிர் ஜங்கோ, மைக்ளி லூயிஸ், குடகேஷ் மோடி, ஆண்டர்சன் பிலிப், கெமர் ரோச், ஜய்டென் சீல்ஸ், கெவின் சின்க்ளைர், ஜமோல் வரிக்கேன்.