செய்திகள் :

2 படகுகளில் 260 ரோஹிங்கியா அகதிகள்! இந்தோனேஷியாவில் தஞ்சம்!

post image

இரண்டு படகுகள் மூலம் 260க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் இந்தோனேஷியா நாட்டுக் கரைகளை வந்தடைந்தனர்.

மியான்மர் நாட்டிலிருந்து 2 படகுகள் மூலம் பயணித்த 260க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் நேற்று (ஜன.5) மாலை இந்தோனேஷியா நாட்டின் கிழக்கு அச்சே மாகாணத்தின் கரைகளை வந்தடைந்துள்ளனர்.

படகுகள் மூலம் இந்தோனேஷியா வந்த ரோஹிங்கியா அகதிகளில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கிழக்கு அச்சே காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்நாட்டு காவல்துறையும் ராணுவமும் ஐ.நா அகதிகள் ஆணையத்தின் உதவியோடு அவர்கள் அனைவரையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாகக் கூறினார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 300க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் கிழக்கு அச்சே மாகாணத்தின் கரைகளை வந்தடைந்துள்ளனர்.

இதையும் படிக்க:இந்தியர் கொலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர் கைது!

முன்னதாக, மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோஹிங்கியா இனத்தவர்கள் பெரும்பாலானோர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டில் அவர்களுக்கு எதிராக நிகழும் தொடர் இனப்படுகொலை, கற்பழிப்பு ஆகியவற்றிலிருந்து தப்பித்து பக்கத்து நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகின்றனர்.

இவர்களில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வங்கதேசத்தின் முகாம்களில் தங்கியிருந்தனர்.

அந்நாட்டில் ஏற்பட்ட மாணவப் புரட்சி மற்றும் ஆட்சி கவிழ்பைத் தொடர்ந்து இந்தோனேஷியாவில் அவர்கள் தஞ்சமடைந்து வந்தனர். இதனால், இந்த விவகாரத்தில் இந்தோனேஷியா சர்வதேச நாடுகளின் உதவியை நாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜன. 11-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

ஜன. 11 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப... மேலும் பார்க்க

கார் ரேஸ் பயிற்சி: விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!

துபையில் கார் ரேஸுக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நடிகர் அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கியது. விபத்தில் கார் சேதமடைந்த போதும் நடிகர் காயமின்றி உயிர் தப்பினார்.Ajith Kumar’s massive crash in p... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கத்தைக் கைவிடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

டங்ஸ்டன் சுரங்கத்தைக் கைவிடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மத்திய அரசின் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை முழுமையாகக் கை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டி? நாளை முக்கியக் கூட்டம்!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎ... மேலும் பார்க்க

யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்றக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

பொங்கல் உள்ளிட்ட நாள்களில் நடைபெறும் யுஜிசி-நெட் தேர்வு தேதிகளை மாற்றியமைக்க மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளி... மேலும் பார்க்க

ஆளும் கட்சிக்கு மட்டும் போராட்டத்துக்கு அனுமதியா? - தமிழிசை கேள்வி

தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு மட்டும் போராட்டத்துக்கு அனுமதியா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டப் பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, திங்கள்க... மேலும் பார்க்க