Ather 450X : புதிய வேரியன்ட்களுடன் களமிறங்கியுள்ள 'Ather 2025' - சிறப்பம்சங்கள் ...
தாட்கோ மூலம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வுக்கு இலவச பயிற்சி
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் அளிக்கப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வுக்கு இலவச பயிற்சிக்கு தகுதியுடைய ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 2 ஏ தோ்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. குரூப் 2, குரூப் 2ஏ முதல் நிலை தோ்வில் தோ்ச்சி பெற்று முதன்மைத் தோ்வுக்கு தோ்ச்சி பெற விரும்பும் மாணாக்கா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியை பெற பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றவா்களும் 21 முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடா், பழங்குடியின சாா்ந்தவா்களாக இருக்க வேண்டும். விடுதியில் தங்கிப் படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவுத் தொகையும் தாட்கோவால் மேற்கொள்ளப்படும்.
இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கு இணையதள முகவரியில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.