குஜராத்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இளம் பெண்ணை மீட்கும் பணி தீவிரம்!
Ather 450X : புதிய வேரியன்ட்களுடன் களமிறங்கியுள்ள 'Ather 2025' - சிறப்பம்சங்கள் என்னென்ன?
EV ஸ்கூட்டர் மார்க்கெட்டில் தனக்கென பிரத்யேக இடத்தை தக்க வைத்திருக்கும் Ather, 2025 தொடக்கத்தில் புதிய வேரியன்ட்களுடன் களமிறங்கியுள்ளது. தனது முந்தைய 450X மாடலை புதுப்பித்து 450 சிரீஸை அறிமுகப்படுத்தியுள்ளது. 2.9 kWh வேரியன்ட் ரூ.1.47 லட்சமாகவும் 3.7 kWh ரூ.1.57 லட்சமாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய விலையை விட ரூ.6,400 மற்றும் ரூ.2,000 அதிகம்.
'Rain, Road, Rally' என மூன்று மோடுகளில் ட்ராக்ஷன் கன்ட்ரோல் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. ட்ராக்ஷன் கன்ட்ரோல் ஆஃப் செய்தும் இயக்கலாம். மேஜிக் டிவிஸ்ட் ரீ-ஜெனிரேட்டிவ் பிரேக்கிங் ஆப்ஷனை 450X, 450 Apex மாடல்களுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது. MRF டயருடன் இந்த ஸ்கூட்டர்கள் வரவுள்ளன.
ரேஞ்ச் 2.9 வேரியன்ட்டில் 85 கி.மீ-லிருந்து 105 கி.மீ ஆகவும் 3.7 வேரியன்டில் 130 கி.மீ ஆகவும் அதிகரித்திருக்கிறது. ஏத்தர் தரக்கூடிய 700W ஹோம் சார்ஜர், ஜீரோவிலிருந்து 80 சதவிகத சார்ஜ் 3 மணி நேரத்தில் ஏறும் எனக் கூறப்படுகிறது.
'Ather Pro pack' - சாஃப்ட்வேர் இண்டிகிரேஷன் உடன் தரப்படுகிறது. கூகுள் மேப், அலெக்ஸா இணைத்துக்கொள்வது, வாட்ஸ் ஆப் நோட்டிபிகேஷன், லைவ் லோகேஷன் ஷேரிங் என டெக்னாலஜியாகவும் அப்டேட் ஆகியுள்ளது. ப்ரோ பேக் ஆப்ஷனலாக இணைத்துக்கொள்ளலாம். ரூ.17 ஆயிரம், ரூ.20 ஆயிரம் விலையில் உள்ளன.
இந்த சிரீஸில் 450S, 450X (2.9 kWh), 450X (3.7 kWh), 450 Apex வேரியன்ட்கள் உள்ளன. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.3 லட்சம், ரூ.1.4 லட்சம், ரூ.1.6 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம்.