``மார்கழியில் கோலப்பொடி விற்பனை; மற்ற மாதங்களில் கூலி வேலை" -பொங்கலை நம்பி வாழும...
Justin Trudeau: பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ட்ரூடோ... அடுத்த கனடா பிரதமர் யார்?!
2015-ம் ஆண்டு லிபரல் கட்சி சார்பாக கனடா பிரதமராக பதவியேற்ற ஜஸ்டின் ட்ரூடோ 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று அதே பதவியில் தொடர்ந்தார்.
ஆனால், 2015-ம் ஆண்டு இருந்த அதே நற்பெயர் அவருக்கு 2021-ம் தேர்தலுக்கு பிறகு தொடரவில்லை. மேலும், அவருக்கு அவருடைய கட்சியினர் ஆதரவும் குறைந்தது.
சமீபத்தில், ட்ரூடோ கனடாவில் நடந்த காலிஸ்தான் தலைவர் கொலைக்கு இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய தூதரக அதிகாரிகளை காரணம் காட்டியது எப்படி இந்திய - கனடா உறவில் விரிசல் ஏற்படுத்தியதோ, அதே அளவிற்கான பின்னடைவை அவர் கனடா மக்கள் மத்தியிலும் சந்தித்தார்.
இந்த நிலையில், நேற்று, ஜஸ்டின் ட்ரூடோ தான் பதவி விலகுவதாக அறிவித்தார். ஆனால், அவர் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்படமாட்டார். இன்னொருவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் வரை, ட்ருடோவே பிரதமராக தொடர்வார்.
அடுத்து 'இவர்' பிரதமராக பதவி ஏற்கலாம் என்ற போட்டியில் முன்னாள் துணை பிரதமர் மற்றும் நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், தற்போதைய சர்வதேச விவகாரங்கள் அமைச்சர் டாமினிக் லீ பிளாங்க், கனடா மற்றும் இங்கிலாந்து வங்கிகளின் முன்னாள் கவர்னர் மார்க் கார்னே ஆகிய மூவர் உள்ளனர்.
லிபரல் கட்சிக்கு வெளியே, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரேக்கும் ஆதரவுகள் பெருகி வருகிறது. ஆக, இவரும் பிரதமர் ரேஸில் முந்துவதற்கான வாய்ப்பு உண்டு.