அணி வீரர்கள் காயம்: மாற்று வீரராக களமிறங்கிய உதவிப் பயிற்சியாளர்!
குஜராத்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இளம் பெண்ணை மீட்கும் பணி தீவிரம்!
காந்தி நகர்: குஜராத்தின் கச் மாவட்டத்திலுள்ள கந்தேராய் கிராமத்தில் சரியாக மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றுக்குள் 18 வயது இளம்பெண் ஒருவர் விழுந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், இளம் பெண்ணை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆழ்துளைக் கிணற்றில் உயிருக்குப் போராடும் பெண்ணுக்கு ஆக்ஸிஜன் உள்ளே செலுத்தப்பட்டு அவர் மூச்சுவிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் வட்டாட்சியர் அருண் ஷர்மா தெரிவித்துள்ளார்.