பஞ்சாப் எல்லையில் டிரோன், ஹெராயின் பாக்கெட்டுகள் மீட்பு!
பஞ்சாபில் சர்வதேச எல்லை அருகே டிரோன், 2 ஹெராயின் பாக்கெட்டுகளை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
பஞ்சாப் எல்லையில் பஞ்சாப் காவல்துறையுடன் இணைந்து எல்லைப் பாதுகாப்புப் படையும் சனிக்கிழமை கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டது.
அப்போது டிரோன், 2 ஹெராயின் பாக்கெட்டுகளை அவர்கள் மீட்டுள்ளனர். இரண்டு தனித்தனி சம்பவங்களில் இந்த மீட்புகள் நடைபெற்றுள்ளன.
இதுகுறித்த பிஎஸ்எஃப் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தர்ன் தரான் மாவட்டத்தில் உள்ள தால் கிராமத்திற்கு அருகிலுள்ள விவசாய வயலில் இருந்து 562 கிராம் எடையுள்ள சந்தேகத்திற்கிடமான ஹெராயின் பாக்கெட்டுடன் டிரோனை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு: நாளை(ஜன.6) முன்பதிவு தொடக்கம்
அதே பகுதியில் இருந்து 632 கிராம் எடையுடைய மற்றொரு சந்தேகத்திற்கிடமான ஹெரோயின் பாக்கெட் கைப்பற்றப்பட்டது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் எல்லைக்கு அப்பால் இருந்து செயல்படும் போதைப் பொருள் சிண்டிகேட்களின் திட்டங்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.