Justin Trudeau:`இந்தியாவுடன் உரசல்... பொருளாதார சிக்கல்' - ஜஸ்டின் ட்ரூடோ ராஜினா...
பிக் பாஸ் வீட்டின் கடைசி போட்டியாளர், இப்போது முதலிடத்தில்!
பிக் பாஸ் வீட்டில் கடைசியாக, 24வது போட்டியாளராகக் கலந்துகொண்ட ரயான், பிக் பாஸ் வீட்டின் முதல் இறுதிப்போட்டியாளராகத் தேர்வாகியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமையே இறுதி சுற்றுக்குத் தேர்வாகும் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், வார இறுதியான இன்று (ஜன. 5) யார் வெற்றியாளர் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி டிக்கெட் டூ ஃபினாலே போட்டிகளில் சிறப்பாக விளையாடி அதிக புள்ளிகளைப் பெற்ற ரயான், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் முதல் இறுதிப் போட்டியாளராகத் தேர்வாகியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த விஜய் சேதுபதி, டிக்கெட் டூ ஃபினாலேவில் வெற்றி பெற்ற போட்டியாளரின் பெயரை போட்டியாளர்களிடமே கேட்டு அதனை உறுதி செய்தார். அனைவரும் அதிகப் புள்ளிகளைப் பெற்ற ரயான் பெயரைக் கூறினர். அதன்படி சிறப்பாக விளையாடிய ரயானுக்கு இறுதிப் போட்டிக்குச் செல்வதற்கான டிக்கெட்டை விஜய் சேதுபதி வழங்கினார்.
அதனைப் பெற்றுக்கொண்டு பேசிய ரயான், ''பிக் பாஸ் வீட்டிற்கு வந்த கடைசி போட்டியாளர் நான்தான் சார். 24வது போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்தேன்'' எனக் கூறினார்.
அதனை நினைவுகூர்ந்த கேட்ட விஜய் சேதுபதி, ''கடைசியாக வந்து இந்த வீட்டின் முதல் இறுதிப்போட்டியாளராக முன்னேறியிருக்கிறீர்கள்'' எனப் பாராட்டினார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று ராணவ் வெளியேற்றப்பட்ட நிலையில், 9 போட்டியாளர்கள் எஞ்சியுள்ளனர். இதில் ரயான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். மற்ற 8 போட்டியாளர்களுக்கும் சம வாய்ப்புள்ளதை நம்புவதாக விஜய் சேதுபதி கூறினார்.
கடந்த முறை வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த அர்ச்சனா வெற்றி பெற்றிருந்தார். தற்போது இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ள ரயானும் வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவர் என்பதால், பலரும் ரயான் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர்.
இறுதிப் போட்டிக்கு நுழைந்த ரயானுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிக்க | பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் நண்பன்! ரசிகர்கள் பாராட்டு!