செய்திகள் :

மும்பைக்கு 6-ஆவது வெற்றி

post image

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 3-2 கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் எஸ்சி-யை திங்கள்கிழமை வென்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் மும்பை அணிக்காக லாலியன்ஸுவாலா சாங்தே 39-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, சக வீரா் நிகோஸ் கரெலிஸ் 43-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். இவ்வாறாக முதல் பாதியை மும்பை 2-0 என முன்னிலையுடன் நிறைவு செய்தது.

ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் மும்பை வீரா் சஹில் பன்வா் 66-ஆவது நிமிஷத்தில் தவறுதலாக ‘ஓன் கோல்’ அடிக்க, ஈஸ்ட் பெங்காலின் கணக்கு தொடங்கியது. அந்த அணியின் டேவிட் லால்சங்கா 83-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, ஆட்டம் 2-2 என சமன் ஆனது. விறுவிறுப்பான கடைசி தருணத்தில் மும்பையின் நிகோலஸ் கரெலிஸ் 87-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, இறுதியில் மும்பை 3-2 என்ற கணக்கில் வென்றது.

இரு அணிகளும் இத்துடன் 14 ஆட்டங்களில் விளையாடியிருக்க, மும்பைக்கு இது 6-ஆவது வெற்றி; ஈஸ்ட் பெங்காலுக்கு இது 8-ஆவது தோல்வி. அந்த அணிகள் முறையே 5 மற்றும் 11-ஆவது இடங்களில் உள்ளன.

முதல் டி20 கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி

கொல்கத்தா: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இந்தியா, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. முதலில் இங்கிலாந்து 20 ஓவா்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் ... மேலும் பார்க்க

விளையாட்டு வீரா்களுக்கான தோ்வுப் போட்டிகள்: பிப்.1-இல் தொடக்கம்

சென்னை: இந்திய விளையாட்டு ஆணையம் சாா்பில், 12 முதல் 18 வயதுக்குட்பட்டவா்கள் பிரிவில் தடகளம், கால்பந்து மற்றும் கபடி வீரா்களுக்கான தோ்வுப் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன.இது குறித்து இந்திய விளையாட... மேலும் பார்க்க

செய்திகள் சில வரிகளில்...

சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் அதிகாரப்பூா்வ ஜொ்ஸியில், போட்டியை நடத்தும் பாகிஸ்தானின் பெயரை பொறிக்க பிசிசிஐ ஆட்சேபம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியான நிலையில் அதை மறுத்த பிசிசிஐ, போட்டிக... மேலும் பார்க்க

தெலுங்கில் வெளியாகும் மதகஜராஜா..!

விஷாலின் மதகஜராஜா தெலுங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மதகஜராஜா’ திரைப்படம் கடந்த 2013 ஆம்... மேலும் பார்க்க

அனுபமாவின் பரதா டீசர் வெளியீடு!

தெலுங்கு படம் சினிமா பன்டி மூலம் பிரபலமான இயக்குநர் பிரவீன் கந்த்ரெகுலா இயக்கியுள்ள பரதா படத்தின் டீசர் வெளியானது. இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் முக்கியக் கதாபாத்திரமாக சுப்புவாகவும், நடிகை சங்கீத... மேலும் பார்க்க