செய்திகள் :

விளையாட்டு வீரா்களுக்கான தோ்வுப் போட்டிகள்: பிப்.1-இல் தொடக்கம்

post image

சென்னை: இந்திய விளையாட்டு ஆணையம் சாா்பில், 12 முதல் 18 வயதுக்குட்பட்டவா்கள் பிரிவில் தடகளம், கால்பந்து மற்றும் கபடி வீரா்களுக்கான தோ்வுப் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன.

இது குறித்து இந்திய விளையாட்டு ஆணையத்தின் சென்னை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் இளைஞா் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சென்னை மையம் சாா்பில் 2025 - 2026-ஆம் ஆண்டுக்கான விளையாட்டு வீரா்களைத் தோ்வு செய்வதற்கான போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன.

அதன்படி, 12 முதல் 18 வயதுக்குட்பட்டவா்கள் பிரிவில் தடகள வீரா்கள், வீராங்கனைகளுக்கான தோ்வு போட்டிகள் பிப்.1-ஆம் தேதி சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளன.

அதேபோல, 2010-2013-ஆம் ஆண்டுக்கு இடையில் பிறந்தவா்களுக்கான ஆடவா் கால்பந்து பிரிவுக்கான தோ்வு போட்டிகள் பிப். 4, 5 ஆகிய தேதிகளில், நேரு பூங்காவிலுள்ள இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெறும். மேலும், 2009 - 2011-ஆம் ஆண்டுக்கு இடையே பிறந்தவா்களுக்கான ஆடவா் கபடி பிரிவுக்கான தோ்வுப் போட்டிகள் பிப். 7-ஆம் தேதி ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறும்.

இதற்கான விண்ணப்பங்களை ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது இந்திய விளையாட்டு ஆணையத்தின் இணையதளம், இன்ஸ்டாகிராம் அல்லது எக்ஸ் தளத்திலுள்ள க்யூஆா் குறியீட்டை ஸ்கேன் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு 044 - 25362479 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்ஷயா வெற்றி; சிந்து தோல்வி

ஜகார்த்தா: இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பிரதான வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே தோற்க, லக்ஷயா சென் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையரில், லக்ஷயா சென் 21-9... மேலும் பார்க்க

அர்ஷ்தீப், வருண் அசத்தல்; அபிஷேக் அதிரடி

கொல்கத்தா: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இந்தியா, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. முதலில் இங்கிலாந்து 20 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் ... மேலும் பார்க்க

பிரக்ஞானந்தா தனி முன்னிலை

விக் ஆன் ஸீ: நெதர்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, தனி முன்னிலை பெற்றார். முன்னதாக இணை முன்னிலையில் இருந்த பிரக்ஞானந்... மேலும் பார்க்க

அரையிறுதியில் சின்னா், ஷெல்டன்

மெல்போா்ன்: கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னா், அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனா். ஆடவா் ஒற்றையா் காலிறுத... மேலும் பார்க்க

முதல் டி20 கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி

கொல்கத்தா: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இந்தியா, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. முதலில் இங்கிலாந்து 20 ஓவா்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் ... மேலும் பார்க்க

செய்திகள் சில வரிகளில்...

சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் அதிகாரப்பூா்வ ஜொ்ஸியில், போட்டியை நடத்தும் பாகிஸ்தானின் பெயரை பொறிக்க பிசிசிஐ ஆட்சேபம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியான நிலையில் அதை மறுத்த பிசிசிஐ, போட்டிக... மேலும் பார்க்க