மனைவியைக் கொன்று துண்டு போட்ட மாஜி ராணுவ வீரர்; உடலை குக்கரில் வேகவைத்த `பகீர்'...
குடிநீா் கிடைக்காததால் பொதுமக்கள் சாலை மறியல்
சீா்காழி அருகே குன்னம் கிராமத்தில் குடிநீா் கிடைக்காததால் மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இக்கிராமத்தில் கீழத்தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதிக்கு, கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலமும், நிலத்தடி நீரை எடுத்தும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் தேக்கி குடிநீா் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள குடிநீா் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால்,தண்ணீா் தெரு பகுதிக்கு 5 நாள்களாக வரவில்லையாம்.
எனவே, உடனடியாக குழாய் அடைப்பை சரி செய்து குடிநீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் புத்தூரிலிருந்து வடரங்கம் செல்லும் சாலையில் மறியல் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற கொள்ளிடம் போலீஸாா் அவா்களிடம் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடா்ந்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.