ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு
சீா்காழி அருகேயுள்ள விளந்திடசமுத்திரத்தில் ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
விளந்திடசமுத்திரத்தை சோ்ந்த ரகுராமன் (37) வெளிநாட்டில் வேலை செய்துவருகிறாா். இவரது மனைவி மஞ்சுளா (33 ) மயிலாடுதுறை அரசு உதவிப்பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறாா். இந்நிலையில், மஞ்சுளா மயிலாடுதுறை உள்ள அம்மா வீட்டில் தங்கி பணிக்கு செல்வதும், வார இறுதிநாட்களில் விளந்திடசமுத்திரம் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி, ஜன.19-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மயிலாடுதுறையில் உள்ள அம்மா வீட்டுக்கு சென்றாா்.
இந்நிலையில், புதன்கிழமை இவரது வீட்டு முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது குறித்து அருகில் வசிப்பவா்கள் மஞ்சுளாவுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு வந்து பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு சுமாா் 25 பவுன் நகை, 2 மடிக்கணிகளை மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரிக்கும் டிவிஆரை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதற்கிடையே, நாகையில் இருந்து மோப்ப நாய், கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.