செய்திகள் :

புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை: சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றம்!

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (58). இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிமக் கொள்ளைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

ஜகபர் அலி

குறிப்பாக, திருமயம் அருகே உள்ள துலையானூரில், அதன் அருகே உள்ள வலையன்வயலைச் சேர்ந்த ராசு மற்றும் ராமையா ஆகியோர் நடத்தி வரும் ஆர்.ஆர் குரூப்ஸ் என்ற பெயரிலான கிரஷர் மற்றும் கல்குவாரிக்கு எதிராக தொடர்ந்து புகார் மனு அளித்து வந்தார். இந்நிலையில் தான், ஜகபர் அலி கடந்த 17-ம் தேதி அன்று தொழுகை முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது குவாரி உரிமையாளர்களின் சதித்திட்டத்தால் 407 மினி லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, இது தொடர்பாக திருமயம் காவல்துறையினர் உயிரிழந்த ஜகபர் அலியின் மனைவி மரியம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்து இதில் தொடர்புடைய குவாரி உரிமையாளர் ராசு அவரது மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், விபத்தை ஏற்படுத்தி கொலை செய்வதற்காக அழைத்துவரப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் காசிநாதன் ஆகிய நான்கு பேரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அந்த வாகனம்

அவர்களை வருகின்ற பிப்ரவரி 3-ம் தேதி வரை நீதிமன்ற காவல் பெற்று புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர். அதோடு, இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள குவாரி உரிமையாளர்களில் ஒருவரான ராமையாவை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில்தான், சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவினரான கரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கனிமவளத்துறை உதவி இயக்குனர்கள் இரண்டு பேர் மற்றும் புவியியலாளர் இரண்டு பேர் என இரண்டு குழுவினர் ஜகபர் அலி புகார் தெரிவித்திருந்த குவாரி உரிமையாளர்கள் ராசு மற்றும் ராமையாவுக்கு சொந்தமான துலையானூரில் உள்ள ஆர்.ஆர் குருப்ஸூக்கு சொந்தமான கல்குவாரிகளில் ட்ரோன் உதவியுடன் கடந்த இரண்டு நாட்களாக அளவிடும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

அளவிடும் பணி

இந்நிலையில், இந்த சம்பவத்தைக் கண்டித்து பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தே.மு.தி.க உள்ளிட்டக் கட்சிகள் இந்த சம்பவத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. ‘இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற்று, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்று தர வேண்டும்’ என்ற கோரிக்கையும் பல்வேறு தரப்பில் இருந்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீஸார் வசம் மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

மனைவியைக் கொன்று துண்டு போட்ட மாஜி ராணுவ வீரர்; உடலை குக்கரில் வேகவைத்த `பகீர்' சம்பவம்!

ஐதராபாத்தில் வசிப்பவர் குருமூர்த்தி. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான குருமூர்த்தி, செக்யூரிட்டி கார்டாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மாதவியை கடந்த 18ம் தேதியில் இருந்து காணவில்லை. இது குறித்து மாதவியின் ... மேலும் பார்க்க

`இவனைக் கொன்னுடலாம்னு தோணுது’- குடித்துவிட்டுத் துன்புறுத்தல்; தோசை மாவில் விஷம்– தாய், காதலி கைது

விழுப்புரம் குமளம் ஊராட்சி சீனுவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமியின் மகன் விஸ்வலிங்கம். கார் ஓட்டுநரான விஸ்வலிங்கம், சில ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோவிலூருக்கு சவாரி சென்றார். அப்போது மேலத்தாழனூர்... மேலும் பார்க்க

சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை வழக்கு; கல்குவாரிகளில் 2வது நாளாகத் தொடரும் அளவிடும் பணி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (58). இவர், கடந்த மூன்று ஆண்டுகளாகத் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் சட்டவிரோதம... மேலும் பார்க்க

கரூர்: முன்னாள் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்; கொல்ல திட்டம் போட்ட இளைஞர்; முறியடித்த போலீஸ்

திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும், சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில், சூசையப்பர் பட்டினத்தைச் சேர்ந்த சிவசங்கர் (வயது 24) என்பவரும் சமூக வலைத்தளமான முகநூல் மூல... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ஆடையில்லாமல் வீடியோ காலில் வா’ - இன்ஸ்டாகிராம் நட்பால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

புதுச்சேரியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவது, ஸ்டேடஸ் வைப்பது போன்றவற்றில் ஆக்டிவாக இருந்திருக்கிறார். அப்போது திருவாரூரைச் சேர்ந்த முஜீப் அலி என்பவருடன் நட்பு ஏற்பட்டு ... மேலும் பார்க்க

10 வருட தலைமறைவு வாழ்க்கை; செல்ஃபியால் சிக்கல் - என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர்!

சத்தீஷ்கர் மற்றும் ஒடிசா எல்லையில் இரண்டு நாட்களுக்கு முன்பு 20 நக்சலைட்கள் பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்களில் நக்சலைட் அமைப்பில் முக்கிய நிர்வாகியா... மேலும் பார்க்க